twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'போதை மாத்திரைகள் இல்லாமல் சினிமா பார்ட்டிகள் நடக்காது..' மற்றொரு நடிகை பகீர் புகார்!

    By
    |

    ஐதராபாத்: தெலுங்கு சினிமாவிலும் போதைப் பொருள் இல்லாமல் பார்ட்டிகள் நடக்காது என்று பிரபல நடிகை பகீர் புகார் கூறியுள்ளார்.

    Recommended Video

    போதை பொருள் வாங்க தெருவில் பிச்சை எடுத்த சஞ்சய் தத்- வீடியோ

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பாலிவுட்டில் போதைப் பொருள் பழக்கம் பற்றிய பிரச்னை தலைதூக்கி இருக்கிறது.

    இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள் இல்லாமல் எந்த பார்ட்டிகளும் பாலிவுட்டில் நடக்காது என்றும் அவர் கூறியிருந்தார்.

    சினிமாவில் போதைப்பொருள் விவகாரம்.. ஜெயம் ரவி பட ஹீரோயினுக்கு அதிரடி சம்மன்.. தீவிரமாகும் விசாரணை!சினிமாவில் போதைப்பொருள் விவகாரம்.. ஜெயம் ரவி பட ஹீரோயினுக்கு அதிரடி சம்மன்.. தீவிரமாகும் விசாரணை!

    முற்றுப்புள்ளி

    முற்றுப்புள்ளி

    அதோடு, இந்தி நடிகர்கள் ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், விக்கி கவுசல், அயன் முகர்ஜி உள்ளிட்டோர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக வதந்திகள் வருகின்றன. அவர்கள் தாங்களாகவே முன் வந்து ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி, பரப்பப்படும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்திரஜித் லங்கேஷ்

    இந்திரஜித் லங்கேஷ்

    இந்நிலையில் பெங்களூரில் சினிமா துறையினருக்கு போதை பொருள் விற்றதாக டிவி நடிகை அனிதா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், போதைப் பொருள் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் தெரிவித்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    ராகிணி திவிவேதி

    ராகிணி திவிவேதி

    இந்நிலையில் நடிகை ராகிணி திவிவேதிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டில் ஆந்திராவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தெலுங்கு திரையுலகினருக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    ஹீரோ ரவிதேஜா

    ஹீரோ ரவிதேஜா

    இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தெலுங்கு ஹீரோ ரவிதேஜா உள்பட பலர் சினிமா பிரபலங்கள் விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில் தெலுங்கு சினிமாவிலும் போதைப் பொருள் பழக்கம் இருக்கிறது என்று நடிகை மாதவி லதா தெரிவித்துள்ளார். நடிகர், நடிகைகள் பெயர்களை குறிப்பிடாமல் அவர் அளித்த பேட்டியில், தெலுங்கு சினிமாவிலும் போதைப் பொருள் பழக்கம் இருக்கிறது. சில பார்ட்டிகள், போதைப் பொருள் இல்லாமல் நடக்காது.

    அரசியல் செல்வாக்கு

    அரசியல் செல்வாக்கு

    முன்னணி நடிகர்கள் சிலர், தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக அந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வந்தனர், அந்த வழக்கை விசாரித்த அதிகாரி வேறு துறைக்கு மாற்றப்பட்டார் என்று கூறியுள்ளார். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை மாதவி லதா, தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

    கட்சி பணிகளில்

    கட்சி பணிகளில்

    தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் கிரணுக்கு மகளாக நடித்திருந்தார். பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஆந்திராவில் நடந்த பொதுத்தேர்தலில் பாஜக சார்பில், குண்டூர் மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் தோற்றாலும் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    English summary
    Telugu actress Madhavi Latha reveals dark secrets about the use of drugs in Tollywood parties
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X