அப்ப விஜய் சேதுபதி? பிரபாஸின் சலார் படத்தில் இவர்தான் வில்லனாமே.. அறிவித்தார் நடிகர்!
சென்னை: பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வில்லனாக பிரபல கன்னட நடிகர் நடிக்கிறார்.
'கே.ஜி.எஃப்' படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

ஶ்ரீனிதி ஷெட்டி
முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2 என்ற இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த யஷ், ஶ்ரீனிதி ஷெட்டி ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். ரவீனா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு
இந்த வருடத்தின் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தை கொரோனா காரணமாக திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இதன் ஷூட்டிங், கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கி முடிந்துள்ளது.

சாதனைப் படைத்தது
இதற்கிடையே, இந்த படத்தின் டீசர், ஹீரோ யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகி, வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர், வெளியான 76 நிமிடங்களில், யூடியூப்பில் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது.

ஹொம்பாளே பிலிம்ஸ்
இந்தப் படத்தை அடுத்து பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சலார் என்ற படத்தை இயக்குகிறார் பிரசாந்த் நீல். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், தெலங்கானா மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தையும் கே.ஜி.எஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது.

விஜய் சேதுபதி
இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கன்னட வில்லன் நடிகர் மது குருசாமி வில்லனாக நடிக்கிறார். இதை அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் சிவராஜ்குமார் நடித்த வஜ்ரகயா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











