நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மது ஷாலினி.. ரேஞ்சரில் நடிக்கிறார் !

சென்னை : நீண்ட நாட்களுக்கு பிறகு மதுஷாலினி தமிழில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமா உலகில் மாடலாக இருந்து பின் ஹீரோயினானவர் தான் மது ஷாலினி. இவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் 2005 பிறகு நடிக்கவில்லை.

Madhu shalini is acting in a Tamil film

தமிழில் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்தார் மது ஷாலினி இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. திரையுலகிற்கு வந்த சில ஆண்டுகளிலே பாலா படத்தில் நடித்துவிட்டார் என்று பல பிரபலங்கள் இவரை வாழ்த்தினர்.

பின் பட வாய்ப்புக்கள் இல்லாமல் இந்தி திரையுலகில் கால்பதித்தார் இரண்டு படங்களில் நடித்தார். மீண்டும் அங்கு வாய்ப்பு குறைந்ததால் மீண்டும் தாய் மொழியான தெலுங்கு சினிமா பக்கம் திரும்பினார். இதன் பின் கமல்ஹாசன் நடித்த துங்காவனம் படத்தில் நடித்தார் மது ஷாலினி. இப்படத்தில் கமலுடன் ஒரு முத்த காட்சியில் நடித்து இருப்பார். அந்த காட்சி படம் வெளியான போது பரபரப்பாக பேசப்பட்டது.

Madhu shalini is acting in a Tamil film

சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, ஏன் தமிழ் சினிமாவில் அதிகம் நடிப்பதில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள், கதை சரியாக அமையாததால் தமிழில் நடிக்கவில்லை கதை மற்றும் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறினார் மது ஷாலினி.

Madhu shalini is acting in a Tamil film
தற்போது ரேஞ்சர் என்ற திரைப்படத்தில் இவர் நடித்து வருவதாக செய்திகள் உலா வருகிறது. இப்படத்தை ஜாக்சன் துரை மற்றும் ராஜா ரங்குஸ்கி படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. மது ஷாலினி நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ தமிழ் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றினால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X