அச்சு அசல் வடிவேலுவாக மாறிய மதுமிதா... வயிறு வலிக்க சிரிக்க வைத்த டான்ஸ் !
சென்னை : பிக் பாஸ் வீட்டில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் நெருப்பு வாரம் இருந்தது போல இந்த வாரம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலம் வாரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் நிலம் காயின் வைத்திருக்கும் நிரூப் கட்டுப்பாட்டில் தான் இனி படுக்கை அறை இருக்கப்போகிறது. எனவே நிருப் அனுமதியின்றி யாரும் படுக்கை அறைக்கு செல்ல கூடாது, மீறினால் நீரூப் தண்டனை கொடுக்கலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்கில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதில் மதுமிதா இம்சை அரசன் 23ம் புலிகேசி வடிவேலு போல கெட்டப்போட்டு சூப்பராக ஆட்டம் போட்டார்.

சினிமா சினிமா
சினிமா சினிமா என்ற பெயரில் தொடங்கும் இந்த டாஸ்கில், ஹவுஸ் மேட்ஸ்களுக்கு தனித்தனி கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் கதாபாத்திரத்திற்கான பாடல் ப்ளே செய்யப்படும் போதெல்லாம் நீங்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வந்து நடனம் ஆட வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.

தாறுமாறு கெட்டப்
சிபி ரஜினிகாந்த் கெட்டப்பிலும், வருண் ரோபோ , இசைவாணி சந்திரமுகி கதாபாத்திரத்திலும், ராஜு எம்.ஆர் ராதா, பிரியங்கா நேசமணி, ஐக்கி சின்னக்கவுண்டர் மனோரம்மாவாகவும், ஸ்ருதி ஜெனிலியா போலவும், இமான் அண்ணாச்சி சிவாஜியாகவும், மதுமிதா இம்சை அரசன் 23ம் புலிகேசி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தார்.

ஆடிவா பாடிவா
இன்று மதுமிதாவுக்கான டாஸ்கில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திலிருந்து ஆடிவா பாட வா பாடல் போடப்பட்டது. இதில், மதுமிதா வடிவேலுப் போலவை சூப்பராக நடனம் ஆடி இருந்தார். அவர் ஆடிய நடனம் ரசிக்கும்படி இருந்தது. அவர் நடனம் ஆடும் போது, அவருடன் ஸ்ருதி, தாமரை இணைந்து நடனம் ஆடினர். மற்ற ஹவுஸ்மெட்டுக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

மதுமிதா தேர்வு
இதையடுத்து, பிரியங்கா நேசமணி வடிவேலு கதாபாத்திரம் போடப்பட்டு இருந்ததால் அவர் எட்டணா இருந்தா பாடலுக்கு வடிவேலு போலவே டான்ஸ் ஆடினார். இதையடுத்து, இந்த சினிமா சினிமா டாஸ்க் முடிவதாக அறிவிக்கப்பட்டது. இதில் மதுமிதாவின் நடனம் சிறப்பாக இருந்ததாக மற்ற போட்டியாளர்கள் கூறினர் . இதையடுத்து மதுமிதா சிறந்த பெர்ஃபார்மராக தேர்வு செய்யப்பட்டார்


Click it and Unblock the Notifications











