twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கட்டணத்தை குறைக்கச் சொன்னதால்.. ஆன்லைன் வகுப்பில் இருந்து பிரபல நடிகையின் மகன்கள் திடீர் நீக்கம்!

    By
    |

    ஐதராபாத்: கல்வி கட்டணத்தை குறைக்கச் சொன்னதால் தனது மகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக நடிகை மதுமிதா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

    Recommended Video

    மகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக நடிகை மதுமிதா புகார்

    பார்த்திபன் இயக்கத்தில் வெளியான குடைக்குள் மழை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை மதுமிதா.

    இந்தப் படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதையடுத்து தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார்.

    அப்படியே மாம்பழம் மாதிரியே இருக்கீங்க.. மஞ்சள் நிற கவுனில் தாராளம் காட்டும் பிரபல நடிகை!அப்படியே மாம்பழம் மாதிரியே இருக்கீங்க.. மஞ்சள் நிற கவுனில் தாராளம் காட்டும் பிரபல நடிகை!

    இங்கிலீஷ்காரன்

    இங்கிலீஷ்காரன்

    சத்யராஜின் இங்கிலீஷ்காரன், ஆணிவேர், நாளை, அறை எண் 305-ல் கடவுள், அமீரின் யோகி, தூங்கா நகரம் உள்பட பல படங்களில் நடித்தார். இவர், தெலுங்கு நடிகர் சிவ பாலாஜியை காதலித்து வந்தார். சிவ பாலாஜி தமிழில், இங்கிலீஷ்காரன் படத்தில் மதுமிதாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

    தனியார் பள்ளி

    தனியார் பள்ளி

    இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு தன்வின் கங்குலா, ககன் கங்குலா என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் ஐதராபாத் அருகில் உள்ள மணிகொன்டாவில் தனியார் பள்ளி ஒன்றில் 6 மற்றும் முதல் வகுப்பு படித்து வருகின்றனர்.

    ஆன்லைன் வகுப்பு

    ஆன்லைன் வகுப்பு

    நடிகை மதுமிதாவும் அவர் கணவர் சிவபாலாஜியும் ஊரடங்கு காரணமாகக் கட்டணத்தை குறைக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். இதன் காரணமாக அவருடைய மகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கி உள்ளது. இதுபற்றி மதுமிதா கூறியிருப்பதாவது: லாக்டவுன் காரணமாக, பெற்றோர்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை.

    கல்விக் கட்டணம்

    கல்விக் கட்டணம்

    என் மகன்கள் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று 240 பெற்றோர் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்தோம். எங்களுக்கு கட்டணம் செலுத்துவது பிரச்னை இல்லை என்றாலும் அவர்களுக்காக குரல் கொடுத்தோம். பள்ளி நிர்வாகத்துக்கு மெயில் அனுப்பினோம்.

    காரணம் சொல்லாமல்

    காரணம் சொல்லாமல்

    இதனால் பள்ளி நிர்வாகம் எந்த காரணமும் சொல்லாமல், ஆன்லைன் வகுப்பில் இருந்து என் மகன்களை நீக்கி இருக்கிறது. என்ன காரணத்துக்காக நீக்கியுள்ளீர்கள் என்று மெயில் அனுப்பியதற்கும் பதில் இல்லை. அதனால் இதை மனித உரிமை ஆணையத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    வாட்ஸ் அப் குரூப்

    வாட்ஸ் அப் குரூப்

    மதுமிதாவின் கணவர் சிவபாலாஜி கூறும்போது, 'நானும் மதுமிதாவும் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து பெற்றோர்களிடம் பேசிவருவதாகக் கருதுகிறது. அது தவறு. அப்படி ஏதும் நாங்கள் செய்யவில்லை. பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் செலுத்தச் சொல்லி எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்றார்.

    English summary
    Actress Madhumitha and her husband Siva Balaji filed a complaint against a School, with the Human Rights Commission
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X