Jangiri Madhumitha: தாய்மாமன் மகனை மணந்த 'ஜாங்கிரி' மதுமிதா: அமைச்சர் ஜெயக்குமார் நேரில் வாழ்த்து
Recommended Video

சென்னை: விஸ்வாசம் படத்தில் நடித்த ஜாங்கிரி மதுமிதாவுக்கும் அவரின் உறவினரான மோசஸ் ஜோயலுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தன் மூலம் பிரபலமானவர் மதுமிதா. அந்த படத்தில் அவரை சந்தானம் ஜாங்கிரி, தேனடை என்று அழைத்தார். இதையடுத்து அவர் ஜாங்கிரி மதுமிதா என்று அழைக்கப்படுகிறார்.
மதுமிதாவுக்கும் அவரின் உறவினரான மோசஸ் ஜோயலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மதுமிதா
மதுமிதாவுக்கும், மோசஸ் ஜோயலுக்கும் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஜேபி ஹோட்டலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

வாழ்த்து
மதுமிதா, மோசஸ் திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி அன்பளிப்பு அளித்தார். மதுமிதாவின் தந்தை வண்ணை கோவிந்தன் அதிமுக பேச்சாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசஸ்
மதுமிதாவை திருமணம் செய்துள்ள மோசஸ் கோலிவுட்டில் உதவி இயக்குனராக உள்ளார். அவர் விரைவில் படம் ஒன்றை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. மதுமிதா- மோசஸுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

உறவினர்
மோசஸ் ஜோயல் மதுமிதாவின் தாய்மாமா மகன் ஆவார். இது பெரியவர்கள் பார்த்து நடத்தி வைத்துள்ள திருமணமாம். மோசஸ் சினிமாவுக்கு வந்த பிறகே மதுமிதா நடிகையானாராம்.


Click it and Unblock the Notifications











