பிக் பாஸில் இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது இவர்தான்.. போகும் போது என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: வார வாரம் விளிம்பு நிலையில் இருந்து வந்த அபிநய் இந்த வாரம் இமான் அண்ணாச்சி மற்றும் மதுமிதாவை விட அதிக வாக்குகள் பெற்று முன்னாடி சென்று விட்டார் எனக் கூறிய கமல் மதுமிதாவின் எவிக்ஷனை அறிவித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது வாரத்தில் இந்த வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளார் ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகியும் ஆடை வடிவமைப்பாளருமான மதுமிதா.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களுக்கும் ஒரே ஒரு அறிவுரையை மட்டுமே சொல்லி சென்றார் மதுமிதா.

அபிநய் முன்னேற்றம்
ஒவ்வொரு வாரமும் விளிம்பு நிலையில் பிக் பாஸ் வீட்டு வாசல் கதவு வரை சென்று விட்டு திரும்பிய அபிநய் இந்த வாரம் அப்படி இல்லை இமான் அண்ணாச்சி மற்றும் மதுமிதாவை விட அதிக வாக்குகள் பெற்று முன்னேறி விட்டார் என கமல் சொல்ல அபிநய் "அய்யய்யோ ஆனந்தமே" என உள்ளுக்குள் ஆடத் தொடங்கிவிட்டார்.

மதுமிதா அவுட்
6 வாரங்களை கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறி உள்ளார் மதுமிதா. யாருடைய வம்புக்கும் தும்புக்கும் போகாமல் கொழு பொம்மையாக பிக் பாஸ் வீட்டை அலங்கரித்து வந்த அவர் இந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

பாவனியின் தோழி
அபிஷேக் ராஜா, சுருதி, மதுமிதா என தொடர்ந்து பாவனியின் நண்பர்கள் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அக்ஷராவுக்கு அடுத்த இடத்தில் தான் இந்த வாரம் பாவனி காப்பாற்றப்பட்டுள்ளார். மேலும், அவர் இந்த வாரம் பாரபட்சத்தோடு ரூல் செய்தார் என பலரும் சொன்ன நிலையில், அவரை அடுத்த வாரம் ஏகப்பட்ட பேர் நாமினேட் செய்ய காத்திருக்கின்றனர்.

எல்லோரும் அன்பா இருங்க
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மதுமிதா அனைத்து போட்டியாளர்களிடமும் யாரும் சண்டை போடாதீங்க.. எல்லோரும் அன்பாக இருங்க என அன்பு கோரிக்கையை வைத்து விட்டு சென்றார். மதுவை பற்றி யாருக்குமே எந்தவொரு புகாரும் இல்லாத நிலையில், அவர் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டு இருப்பது மீண்டும் அபிநயை காப்பாற்றவா? என்கிற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.

ஜெர்மனிக்கு போயிடாத
ஜெர்மனியில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுமிதா எவிக்ட் ஆகி உள்ள நிலையில், இவரும் பிளாஸ்மா டிவி முன்பாக நின்று போட்டியாளர்களுடன் பேச அனுமதிக்கப்பட்டார். அப்போது பேசிய பிரியங்கா நாங்க வர வரைக்கும் வெயிட் பண்ணு ஜெர்மனி போயிடாத எனக் கேட்டுக் கொண்டார். இமான் அண்ணாச்சி மற்றும் தாமரை செல்வி நாங்க ஜெர்மனிக்கே வந்து உன்னை பார்க்குறோம் எனக் கூறினர். எந்தவொரு நெகட்டிவிட்டியும் இல்லாத மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











