மீன் குழம்பு.. வறுத்த மீன்.. வடிச்ச சாதம்.. சேரனுக்கு வாழை இலையில் பரிமாறிய பிக்பாஸ் பிரபலம்!

Recommended Video

Madhumitha Cheran Meet : மதுமிதாவை சந்தீத்த சேரன்-வீடியோ

சென்னை: சட்டியில் மீன் குழம்பு வைத்து இயக்குநர் சேரனுக்கு பிக்பாஸ் பிரபலம் ஒருவர் வாழை இலையில் பரிமாறியுள்ளார்.

இயக்குநர் சேரன் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சகபோட்டியாளரும் நடிகையுமான மதுமிதாவுக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி பிரச்சனை குறித்து பேசியதற்காக மற்ற ஹவுஸ்மேட்ஸ்களின் கோபத்திற்கு ஆளானார் மதுமிதா. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் கையை கத்தியால் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

சேரனுடன் சந்திப்பு

சேரனுடன் சந்திப்பு

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் விதியை முக்கிய விதியை மீறியதாக கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதுமிதா. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் இயக்குநர் சேரன் அண்மையில் மதுமிதாவை அவரது வீட்டில் சந்தித்தார்.

சேரனும் ஷேர்

சேரனும் ஷேர்

இதுதொடர்பான போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார் மதுமிதாவின் கணவர். தொடர்ந்து சேரனும் மதுமிதா மற்றும் அவரது குடும்பத்தினருடன் எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார் சேரன்.

வாழ்வு சிறக்கட்டும்

மேலும், பிக்பாஸ் வீட்டில் மனதில் பட்ட கருத்துக்களை துணிவுடனும் நேர்மையுடனும் பகிர்ந்ததில் மதுமிதாவும் ஒருவர்.. நலம் விசாரிக்க இன்று அவர் இல்லம் சென்று சந்தித்தேன்.. உணவருந்தினேன்.. உபசரிப்பும் பேசிய தருணங்களும் மனதுக்கு மகிழ்வை தந்தது. மதுமிதாவின் வாழ்வு சிறக்கட்டும்.. என வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மீன் குழம்பு

இந்நிலையில் இயக்குநர் சேரனுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மதுமிதாவின் கணவர் மோசஸ். இதில் தரையில் பாய்போட்டு சேரன் அமர்ந்திருக்க, வாழை இலையில் வறுத்த மீன், மீன் குழம்பு என அசைவ உணவுகளை பரிமாறி அசத்தியிருக்கிறார் மதுமிதா.

வாழ்த்து

இந்தபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சியையும் மதுமிதாவுக்கு வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.
மகிழ்ச்சி நிறையட்டும்! அன்பு வாழ்த்துக்கள்! என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X