twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகையை கற்பழித்த வழக்கு: இந்திப் பட இயக்குனர் மீது விசாரணைக்கு தடை!

    By Shankar
    |

    Madhur Bhandarkar and Preeti Jain
    மும்பை: நடிகை ப்ரீத்தி ஜெயின் கற்பழிப்பு வழக்கில், பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கர் மீது கிரிமினல் விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான மதுர் பண்டார்கர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், ஹீரோயின் வாய்ப்பு தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி கற்பழித்து விட்டதாக, கடந்த 2004 ம் ஆண்டு மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் நடிகை பிரீத்தி ஜெயின் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார்.

    நடிகையின் புகாரில் முகாந்திரம் இருப்பதால் மதுர் பண்டார்கர் இந்த வழக்கை சந்திக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இயக்குநர் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து, அவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் இயக்குநர் மதுர் பண்டர்கருக்கு எதிரான கிரிமினல் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

    வழக்கு தொடர்பாக மராட்டிய மாநில அரசு மற்றும் நடிகை பிரீத்தி ஜெயின் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    English summary
    The Supreme Court has stayed criminal proceedings against film producer-director Madhur Bhandarkar in an alleged rape case. The Court has issued notices to Pretti Jain, who filed a case of rape against Mr Bhandarkar and the Maharastra govt, seeking their replies on Bhandarkar's plea to quash the case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X