காலண்டர் கேரள்ஸ்.... முகத்தை மூடி ... இப்படியும் ஒரு படம்!
மதுர் பண்டர்கர் இயக்கி வரும் படம்தான் காலண்டர் கேர்ள். பெயருக்கேற்ப மாடல் அழகிகள் குறித்த படம் இது.
நான்கு முறை தேசிய விருது பெற்ற மதுர் பண்டர்கர் இதை இயக்கி வருகிறார். காலண்டர்களில் அட்டைப் படங்களாக இடம் பெற்று பிரபலமாகும் மாடல் அழகிகள் குறித்த கதைதான் இது.
ஆனால் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் மாடல் அழகிகள் யார் என்பதை ரகசியமாக வைத்துள்ளார் பண்டர்கர். அவர்களின் முகங்களைக் கூட அவர் இன்னும் வெளிக்காட்டவில்லை.

ஒரே ஒரு ஸ்டில் மட்டுமே
இந்தப் படம் தொடர்பாக இதுவரை ஒரே ஒரு ஸ்டில் மட்டுமே வெளியாகியுள்ளது. வேறு படம் எதுவும் வெளியாகவில்லை.

முகத்துக்குத் தொப்பி
அதில் கூட அந்த மாடல் அழகிகளின் முகங்களை தொப்பி போட்டு மறைத்து விட்டனர்.. ஆனால் கவர்ச்சிக்கு திரை போடவில்லை!

ஷூட்டிங்குக்கு பார்வையாளர்களுக்குத் தடை
அதேபோல படப்பிடிப்புக்கும் கூட பார்வையாளர்களுக்கு அவர் தடை விதித்துள்ளார். யாரையும் உள்ளே விடுவதில்லை.

மொபைல் போன் கூடவே கூடாது
அதேபோல தனது படப்பிடிப்புக் குழுவினர் மொபைல் போன்கள், கேமராக்களைக் கொண்டு வரவும் அவர் தடை விதித்துள்ளார்.

கையெழுத்துப் போடுங்கப்பா...
அதை விட முக்கியமாக படத்தின் தயாரிப்பாளரான சங்கீதா அஹிர், படப்பிடிப்புக் குழுவினர் அனைவரிடமும் படம் குறித்த எந்தத் தகவலையும் வெளியில் சொல்ல மாட்டோம் என்று ஒப்பந்தம் போட்டு கையெழுத்தும் வாங்கி வைத்துள்ளாராம். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையரும் கையெழுத்து போட்டுள்ளனராம்.

5 புதுமுக மாடல்கள்
இந்தப் படத்தில் ஐந்து புதுமுகங்களை மாடல் அழகிகளாக நடிக்க வைத்துள்ளாராம் பண்டர்கர்.

கவர்ச்சிமட்டுமல்ல.. நடிப்பும்!
இந்த ஐந்து பெண்களும் கவர்ச்சியில் சொக்க வைக்கும் சுந்தரிகளாக உள்ளனராம். அதேசமயம் நடிப்பிலும் அசத்தி வருகிறார்களாம்.

மும்பை... வெளிநாடுகளில்
தற்போது மும்பையில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்து வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தவுள்ளனராம்.

1ல் ரிலீஸ்
2015ம் ஆண்டு மே 1ம் தேதி காலண்டர் கேர்ள்ஸ் திரைக்கு வரவுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











