பொங்கல் ரேசில் விஜய்காந்த் மகன் சண்முகப்பாண்டியனின் மதுரவீரன்
விஜய்காந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள மதுரவீரன் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஜி முத்தையா இயக்கத்தில் சண்முகப்பாண்டியன், சமுத்திரக்கனி, மீனாட்சி நடித்துள்ள இந்தப் படம் ஜல்லிக்கட்டை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. படத்துக்கு சென்சார் குழு க்ளீன் யு சான்று வழங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து படம் வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

ஏற்கெனவே பொங்கல் ரேசில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விமலின் மன்னர் வகையறா, விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச், பிரபு தேவாவின் குலேபகாவலி போன்ற படங்கள் உள்ளன.
Comments


Click it and Unblock the Notifications