48 கோடிக்கு வீடு வாங்கிய மாதுரி தீக்‌ஷித்.. 53வது மாடியில் இருந்து பார்த்தால் மும்பையே தெரியுமாம்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித் ரூ. 48 கோடிக்கு மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட் நடிகர்கள் பெரும்பாலும், வீடுகள் வாங்கவும், அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்கவும் பல கோடிகளை செலவழித்து வருகின்றனர்.

சிலர் நிலங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில், மாதுரி தீக்‌ஷித் வாங்கி உள்ள குடியிருப்பு பற்றிய தகவல் வெளியாகி பாலிவுட் பிரபலங்களையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

மாதுரி தீக்‌ஷித்

மாதுரி தீக்‌ஷித்

அழகே பொறமைப்படும் பேரழகுக்கு சொந்தக்காரி மாதுரி தீக்‌ஷித் என ரசிகர்கள் அவரை இப்போதும் கொண்டாடி வருகின்றனர். சீனியர் நடிகை ஆகி விட்டாலும், இன்னமும் சிறப்பான ரோல்களில் பாலிவுட்டில் நடித்து கெத்துக் காட்டி வருகிறார். அதே போல வெப்சீரிஸ்களிலும் மாதுரி தீக்‌ஷித் மாஸ் காட்டி வருகிறார்.

வாடகை வீட்டில்

வாடகை வீட்டில்

மும்பையில் நடிகை மாதுரி தீக்‌ஷித் தற்போது மாதம் 12.5 லட்சத்துக்கு சொகுசான வாடகை வீட்டில் தங்கி வருகிறார். 3 ஆண்டுகள் வரை அங்கே அவர் தங்கியிருக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சொந்தமாக ஒரு சொகுசு வீடு வாங்க முடிவு செய்த மாதுரி தீக்‌ஷித் வாங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் விலையை கேட்டாலே பலரும் ஆடிப் போய்விடுவார்கள்.

48 கோடி

48 கோடி

48 கோடி ரூபாய்க்கு மும்பையில் உள்ள ஹைஃபை ஆன இடத்தில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை நடிகை மாதுரி தீக்‌ஷித் வாங்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களின் பார்வையையும் அவர் பக்கம் திருப்பி இருக்கிறது.

53வது மாடி

53வது மாடி

அதுவும் 53வது மாடியில் 5,384 சதுர அடியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை விலைக்கு வாங்கி உள்ளார் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் அதற்கான பத்திரப்பதிவு நடைபெற்றதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 53வது மாடியில் இருந்து பார்த்தால் டோட்டல் மும்பையே செம சூப்பராக தெரியும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சினிமாவில்

சினிமாவில்

1984ம் ஆண்டு வெளியான அபோத் எனும் இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதுரி தீக்‌ஷித். தேஸாப், பிரேம் பிரதிக்யா, தில், சாஜன், பேட்டா, தேவ்தாஸ் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக 2019ல் வெளியான கலங்க் படத்தில் நடித்திருந்தார். 55 வயதாகும் மாதுரி தீக்‌ஷித் நடிப்பில் விரைவில் மஜா மா படம் வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X