»   »  அந்த வெடுக் வெடுக் இடுப்பு.. மறக்க முடியுமா மாதுரியை.. வேற மாதிரி வர்றாங்கண்ணே!

அந்த வெடுக் வெடுக் இடுப்பு.. மறக்க முடியுமா மாதுரியை.. வேற மாதிரி வர்றாங்கண்ணே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பாலிவுட் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம்வந்தவர் மாதுரி தீட்சித். டாக்டர் ஶ்ரீராம் மாதவ் உடனான திருமணத்துக்குப் பின், நடிப்புக்கு இடைவெளிவிட்ட மாதுரி தீட்சித், பின்னர் சில படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்தார்.

தன் தனித்தன்மை வாய்ந்த நடன அசைவுகளால், ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் மாதுரி. இவரது நடனத்துக்காகவே, பல படங்கள் வெள்ளி விழாவைக் கடந்து ஓடின. இன்றும் அவரது ரசிகர்களுக்கு அவர் மீதான க்ரேஸ் அப்படியே இருக்கிறது எனலாம்.

Madhuri Dixit is a producer now

தற்போது, மீண்டும் முழு வீச்சில் திரையுலகில் களம் இறங்கியுள்ளார் மாதுரி. ஆனால், இந்தமுறை நடிகையாக அல்ல தயாரிப்பாளராக. ஆர்.என்.எம் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவக்கியுள்ளார். முதல் முயற்சியாக இப்போது மராத்தி மொழித் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறார் மாதுரி.

madhuri-dixit-is-producer-now

இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முடிந்துள்ளன. இதுபற்றி மாதுரி கூறுகையில், 'என்னையும், சினிமாவையும் அவ்வளவு எளிதாகப் பிரித்து விட முடியாது. நடிப்பு, நடனம், தயாரிப்பு என ஏதாவது ஒரு விஷயத்தில் தொடர்ந்து திரைத்துறையில் பணியாற்றுவேன்.

இப்போது, மராத்தியில் படம் தயாரிக்கிறேன். இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களையும் தயாரிப்பேன்' என்கிறார்.

English summary
Madhuri dixit comes back to cinema industry as a producer. She has launched a production company named R.N.M.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil