Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'அம்மாவுக்கு பதிலாக மாதுரி தீட்சித்..' - ஶ்ரீதேவி மகள் இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு!
Recommended Video
சென்னை : பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன் இயக்கத்தில் உருவாகும் ஷிட்டட் படத்தில், நடிகை ஸ்ரீதேவிக்கு பதில் மாதுரி தீட்சித் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
கரண் ஜோஹர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன், தற்போது ஷிட்டட் என்ற படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் ஶ்ரீதேவி நடிக்கவிருந்தார். அவர் திடீரென காலமானதையடுத்து, அந்த வேடத்தில் மாதுரி தீட்சித் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
ஶ்ரீதேவி
கரண் ஜோஹர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன், தற்போது ஷிட்டட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் வருண் தவான், அலியாபட், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யாராய் கபூர், சஞ்சய் தத் ஆகியோருடன் நடிகை ஶ்ரீதேவியும் முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.
மீண்டும் தொடக்கம்
இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஶ்ரீதேவி இறந்துவிட, படத்தை கைவிட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது, ஷிட்டட் படத்தில் நடிகை ஶ்ரீதேவிக்கு பதிலாக, மாதுரி தீட்சித் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜான்வி கபூர்
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் மூலம் ஶ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிக்கும் தகவல் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மிகுந்த நன்றி
"அபிஷேக் வர்மனின் இந்தப் படம் என் அம்மாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இந்தப் படத்தில் அம்மாவிற்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிப்பதற்கு நான், தங்கை குஷி மற்றும் எனது தந்தை ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.