»   »  சீனியர் நடிகையால் இரண்டு சீனியர் ஹீரோக்களுக்கு இடையே சண்டை!

சீனியர் நடிகையால் இரண்டு சீனியர் ஹீரோக்களுக்கு இடையே சண்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை மாதுரி தீக்ஷித்தால் நடிகர் சல்மான் கான் மற்றும் சஞ்சய் தத் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது. படத்தில் சஞ்சய் தத்தாக ரன்பிர் கபூர் நடிக்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களாக இருந்த சல்மான் கான், சஞ்சய் தத் இடையே பிரிவு ஏற்பட்டது.

அந்த பிரிவுக்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

மாதுரி

மாதுரி

சஞ்சய் தத்தும், மாதுரி தீக்ஷித்தும் ஒரு காலத்தில் காதலித்தார்கள். அதன் பிறகு பிரிந்துவிட்டார்கள். மாதுரி மருத்துவர் ஸ்ரீராம் நீனேவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார்.

சல்மான்

சல்மான்

சஞ்சய் தத் படத்தில் தனது கதாபாத்திரத்தை நீக்குமாறு அவரிடம் கோரிக்கை விடுங்கள் என்று மாதுரி தனது நண்பர் சல்மான் கானிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சஞ்சய்

சஞ்சய்

மாதுரி தன்னிடம் கூறியதை சல்மான் சஞ்சய் தத்தை சந்தித்து தெரிவித்துள்ளார். அதற்கு சஞ்சய் தத்தோ அது எல்லாம் முடியாது. அவரது கதாபாத்திரம் படத்தில் இருக்கும் என்று கூறிவிட்டாராம். இதையடுத்தே சஞ்சய், சல்மான் நட்பில் விரிசல் ஏற்பட்டதாம்.

பிரிவு

பிரிவு

சஞ்சய் தத் தான் தயாரிக்கும் படத்தில் சல்மான் கானை ஹீரோவாக நடிக்க கூப்பிட அவரோ மறுத்துவிட்டார். சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சல்மானுக்கு பிடிக்காத ரன்பிர் கபூர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
It is really hard to believe but if recent reports are anything to go by, Madhuri Dixit is responsible for the fight between Salman Khan and Sanjay Dutt.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil