Just In
- 7 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 7 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 9 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 10 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன்: டிவி நடிகை குமுறல்
மும்பை: இனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன் என்று நடிகை மதுரிமா துலி தெரிவித்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் விஷால் ஆதித்யா சிங்கும், மதுரிமா துலியும் காதலித்து பிரிந்துவிட்டனர். காதல் முறிவுக்கு பிறகு இருவரும் ஜோடியாக நாச் பால்யே 9 நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் அவர்கள் போட்ட சண்டையை பார்த்து நடுவர்களே கடுப்பாகிவிட்டனர். நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மதுரிமா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
கார் கண்ணாடியை உடைத்த நடிகர்: அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

கோபம்
முன்னாள் ஜோடியை சேர்ந்து வேலை பார்க்க வைத்து சரி இல்லை. அது அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை மேலும் பெரிதாக்குகிறது. நாச் பால்யே நிகழ்ச்சி ஒத்திகையின்போது நான் விஷாலை அறைந்தது உண்மை தான். அவர் என்னைப் பிடித்து தள்ளியதால் கோபத்தில் அவரை அறைந்தேன்.

மதுரிமா
நான் விஷாலை திட்டினேன். பதிலுக்கு அவர் என்னை திட்டியிருக்கலாம். ஆனால் அவரோ என்னைப் பிடித்து தள்ளிவிட்டார். அதனால் ஒரு அறை விட்டேன். என்னை தள்ளிவிட அவருக்கு உரிமை இல்லை. அடிக்கடி ஏதாவது இப்படி செய்ததால் தான் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பதிலுக்கு கொடுத்துவிட்டேன்.

விஷால் ஆதித்யா சிங்
நான் அறைந்ததை 5 நிமிடங்கள் கழித்து தான் விஷால் உணர்ந்தார். இனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன். அப்படியே எங்காவது அவரை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவேன். இந்த நிகழ்ச்சியால் போதும் போதும் என்றாகிவிட்டது. இனி விஷாலை சந்திக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார் மதுரிமா.

டான்ஸ்
நான் ஒன்றும் மதுரிமாவுடன் சண்டை போட நாச் பால்யே 9 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நான் நடனமாடி, என் திறமையை உலகிற்கு காட்ட நினைத்தேன். நாங்கள் முன்னாள் காதலர்கள் என்பதால் அடிக்கடி சண்டை போட்டோம். காதலர்கள் கூடத் தான் சண்டை போடுவார்கள். மோதல்கள் எல்லாம் சாதாரணம் என்று விஷால் தெரிவித்துள்ளார்.