காதலித்தாலும் என்னுடன் வெளியே செல்ல அசிங்கப்பட்டார்: நடிகை மீது டிவி நடிகர் புகார்
மும்பை: தன்னுடன் வெளியே செல்ல நடிகை மதுரிமா அசிங்கப்பட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி நடிகர் விஷால் ஆதித்யா சிங்கும், நடிகை மதுரிமா துலியும் காதலித்து பிரிந்துவிட்டபோதிலும் நாச் பால்யே 9 நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர்.
விஷாலின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை பிரிந்ததாக மதுரிமா தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து விஷால் கூறியிருப்பதாவது,

மகிழ்ச்சி
காதலித்தால் ஒன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் இல்லை கவலையாக இருக்க வேண்டும். நானும், மதுரிமாவும் ஒன்றாக இருந்தபோது எனக்கு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியாது. நாங்கள் காதலித்த காலத்தில் சிறு சிறு விஷயங்களுக்காக மதுரிமா குறைந்தது 50 முறையாவது பிரிந்து சென்றிருப்பார்.

மதுரிமா
நான் மதுரிமாவை உண்மையாக காதலித்ததால் பிரிய விரும்பவில்லை. எனக்கு ஆங்கிலத்தில் சரியாக பேச வராது மற்றும் என்னிடம் அவ்வளவாக பணம் இல்லை என்று அவர் நினைத்தார். எப்பொழுது வெளியே கிளம்பினாலும் சண்டை வரும். என்னுடன் வெளிய செல்ல வெட்கப்படுகிறாயா என்று கேட்டதற்கு ஆம் என்றார். என்னை கெட்ட, கெட்ட வார்த்தைகளால் திட்டுவார் மதுரிமா.

கவலை
எங்களின் காதலால் என் கெரியர் பாதிக்கப்பட்டது. நான் எப்பொழுதும் கவலையாக இருந்தேன். காதல் நம் வளர்ச்சியை பாதிக்கிறது என்றால் பிரிவது தான் சரி. எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை, மதுரிமாவை பிரிந்த பிறகு அந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது. நான் திருமணம் செய்ய மாட்டேன். ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறேன்.

காதல் முறிவு
நாச் பால்யே மேடையில் நான் உண்மையாக நடந்து கொள்கிறேன். ரேட்டிங்கிற்காக நடிக்கவில்லை. எதுவும் ஸ்க்ரிப்ட் கிடையாது. நானும், மதுரிமாவும் ஒரே வேனிட்டி வேனை பயன்படுத்துகிறோம். இருப்பினும் நாங்கள் பேசிக் கொள்வது இல்லை. நாங்கள் அண்மையில் பிரிந்ததாக மதுரிமா நாச் பால்யே நிகழ்ச்சியில் தெரிவித்தார். அது பொய், நாங்கள் பிரிந்து ஓராண்டு ஆகிவிட்டது என்கிறார் விஷால் ஆதித்யா சிங். 3 முறை திருமணம் செய்வேன் என்று விஷால் கூறியதாக மதுரிமா தெரிவித்தார். இந்நிலையில் தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை என்கிறார் விஷால்.


Click it and Unblock the Notifications











