‘மல்லிப்பூ‘பாடலுக்கு உயிர்கொடுத்தவர் தான் சண்டக்கோழி பாடலை பாடினாங்களா? அவர் பாடிய பாடலின் லிஸ்ட்!
சென்னை : கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றன.
இப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் அனைவருக்கும் பிடித்த பாடலாக மாறியதை அடுத்து, பாடகியின் குரலில் மயங்கிப்போன ரசிகர்கள் அந்த பாடகி யார் என இணையத்தில் அலசி ஆராயத்தொடங்கி உள்ளனர்.

ரம்மியான குரலில்
மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே..மச்சான் எப்போ வரப்போறா என்ற பாடல் உண்மையில் மனதிற்குள் நுழைந்து ஏதோ செய்துவிட்டது எனலாம். அன்புக்குரிய தலைவனை பிரிந்து தவிக்கும் தலைவியின் ஏக்கத்தை பாடலாசிரியர் தாமரை நயமாக சொல்லி இருப்பார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடகி மதுஸ்ரீ இந்த பாடலை பாடி உள்ளார். அப்பாடல் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானதற்கு பாடகி மதுஸ்ரீயின் குரல் காரணம் எனலாம்.

வாய்ப்பு கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்
கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த மதுஸ்ரீக்கு சிறு வயதில் இருந்தே இசையின் மீது தீராத காதலில் இருந்துள்ளார். சினிமாவில் பாட வாய்ப்பு தேடி அலைந்த அவருக்கு அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. மதுஸ்ரீயின் குரலை எதர்ச்சையாக கேட்ட ஏ.ஆர்.ரகுமான், அலைபாயுதே படத்தின் இந்தி வெர்ஷனில் மதுஸ்ரீயை பாட வைத்தார். இதையடுத்து, வித்யாசாகர் ஆஹா எத்தனை அழகு படத்தில் உதித் நாராயன் உடன் இணைந்து நிலாவிலே நிலாவிலே என்கிற பாடலை பாடி தமிழில் அறிமுகமானார்.

சண்டக்கோழி
அதன்பின்னர், ஆயுத எழுத்து படத்தில் இடம் பெற்ற சண்டக்கோழி என்கிற பாடலை ரகுமான் இசையில் பாடினார் மதுஸ்ரீ. இப்பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன்பின்னர் மதுஸ்ரீக்கு தமிழில் ஏராளமான வாய்ப்புகள் அவரைத் தேடிவந்தன. எப்போ நீ என்ன பாப்ப, மருதாணி, உன் பேரே தெரியாது, என் நண்பனே, விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தில் இடம்பெறும் என்னை மறந்தேன் என ஏராளமான ஹிட் பாடல்களை பாடி உள்ளார் மதுஸ்ரீ.

ரசிகர்கள் வாழ்த்து
மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே..மச்சான் எப்போ வரப்போற என்ற பாடல் உண்மையில் மனதிற்குள் நுழைந்து ஏதோ செய்துவிட்டது எனலாம். அன்புக்குரிய தலைவனை பிரிந்து தவிக்கும் தலைவியின் ஏக்கத்தை பாடலாசிரியர் தாமரை நயமாக சொல்லி இருப்பார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடகி மதுஸ்ரீ இந்த பாடலை பாடி உள்ளார். அப்பாடல் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானதற்கு பாடகி மதுஸ்ரீயின் குரல் தான் காரணம் எனலாம்.


Click it and Unblock the Notifications