வழக்கு எதிரொலி... மடிசார் மாமி படத்தலைப்பு ‘புளிப்பு இனிப்பு’ ஆக மாறியது
சென்னை: பலத்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து மடிசார் மாமி படத்தின் தலைப்பை 'புளிப்பு இனிப்பு' என மாற்றியுள்ளனர் படக் குழுவினர்.
ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் - வார்டு லைப் பிலிக் என்ற பட நிறுவங்கள் இணைந்து தயாரிக்கும் படம் "மடிசார் மாமி". சென்சார் முடிந்து படம் ரிலீசுக்கு காத்திருந்த நிலையில் படத் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்டில் வழக்கு தொடரப் பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தயாரிப்பாளர் சுஷாந்த் கத்ரு கூறியதாவது:-

உண்மையான சினிமா...
நீதி மன்றத்தின் உத்தரவுப் படியும், எந்த ஒரு மனிதனின் மனதையும் பாதிப்பது நல்ல சினிமாவாகாது.

புளிப்பு இனிப்பு...
அதே உரிய நோக்கத்தோடு படத் தலைப்பை ‘புளிப்பு இனிப்பு' என்று மாற்றி வைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

காமெடி கலாட்டா...
மேலும், மே மாதம் வெளியாக உள்ள இப்படம் பேமிலி காமெடி படமாகும்.இரண்டு மணிநேரம் காமெடி கலாட்டா தான் இந்த "புளிப்பு இனிப்பு".

வருத்தம்...
மடிசார் மாமி என்ற தலைப்பை வைத்ததற்காக வருத்தத்தையும் இங்கே பதிவு செய்து கொள்கிறோம் என்றார் சுஷாந்த் கத்ரு.


Click it and Unblock the Notifications











