'அருமையாக உணர்கிறேன்..' இசை அமைப்பாளரை காதலிக்கும் மடோனா செபாஸ்டியன்.. ரசிகர்கள் வாழ்த்து!

By

சென்னை: பிரபல நடிகை மடோனா செபாஸ்டியன் தனது காதலரை சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார்.

பெரும்பாலான நடிகைகள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.

முன்பெல்லாம் காதலையும் காதலர் பற்றிய விஷயங்களையும் நடிகர், நடிகைகள் மறைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

மடோனா செபாஸ்டியன்

மடோனா செபாஸ்டியன்

இப்போது சமூகவலைதளங்கள் மூலம் தங்கள் காதலை தெரிவிப்பதையும் காதலரை அறிமுகப்படுத்தி வருவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். பல நடிகைகள், அதை செய்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார், பிரபல நடிகை மடோனா செபாஸ்டியன்.

அல்போன்ஸ் புத்திரன்

அல்போன்ஸ் புத்திரன்

இவர், மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் பிரபலமானவர். நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் இது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட்டானது. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது.

காதலும் கடந்துபோகும்

காதலும் கடந்துபோகும்

இதில் நடித்த அனைத்து நடிகைகளும் முன்னணி நடிகைகளாக பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தை அடுத்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்துபோகும் படம் மூலம் தமிழுக்கு வந்தார் மடோனா. அடுத்து கவண், பா.பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ராபி ஆபிரகாம்

ராபி ஆபிரகாம்

கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் நடிகை மடோனா, தனது காதலர் ராபி ஆபிரகாமுடன் இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ராபி ஆபிரகாம், பிரேமம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். இவர் இசை அமைப்பாளருடம் கூட. துல்கர் சல்மான் நடித்த தீவ்ரம் உட்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

ஆசிர்வதிப்பார்

ஆசிர்வதிப்பார்

புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, உங்களை சந்தித்து ஏழு வருடமாகிவிட்டது. உங்களை அறிந்ததையும் உங்கள் தொடர்பையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். என்னோடு இணைந்து கொண்டதற்கு நன்றி. இன்னும் உயரம் செல்வீர்கள். உங்களுக்கான இடம் நிச்சயம் கிடைக்கும். கடவுள் உங்களை எப்போதும் ஆசிர்வதிப்பார் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X