Madonna Sebastian: விஜய் குழந்தை மாதிரி.. லியோவில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த மடோனா பேட்டி!
சென்னை: லியோ படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், பிக் பாஸ் ஜனனி மற்றும் மடோனா செபாஸ்டியன் பற்றிய அறிவிப்புகளை படக்குழு ரகசியமாகவே வைத்திருந்தது.
பிக் பாஸ் ஜனனி லியோ படத்தில் பார்த்திபன் விஜய்யின் பேக்கரியில் வேலை செய்யும் பெண்ணாக நடித்துள்ள நிலையில், லியோ தாஸின் தங்கை எலிசாவாக மடோனா செபாஸ்டியன் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
ஏற்கனவே அவர் நடித்துள்ள தகவல்கள் லீக் ஆனாலும், கடைசி வரை படக்குழு அவரது கதாபாத்திரத்தை செம சர்ப்ரைஸாக வைத்திருந்தது குறித்து அவரே தனது லேட்டஸ்ட் பேட்டியில் பேசியுள்ளார்.

பிரேமம் ஹீரோயின்: நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் நடித்த அத்தனை ஹீரோயின்களும் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர். சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கிளைமேக்ஸில் வரும் மடோனா செபாஸ்டியன் என மூன்று பேரின் நடிப்பும் அந்த படத்தில் அட்டகாசம். கடைசியாக நிவின் பாலிக்கு ஜோடியாக மாறும் மடோனாவை பார்த்து தமிழ் நாட்டிலும் பலரும் இவங்க தான் என் கிரஷ் என கொண்டாடினர்.
தமிழில் மடோனா செபாஸ்டியன்: மலையாளத்தில் மாஸ் காட்டிய மடோனா தமிழில் காதலும் கடந்து போகும் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து கவண், ப. பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் தற்போது லியோவில் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளார்.
ஜீன்ஸ் பார்த்துருக்கியா?: லியோ படத்தில் நா ரெடி தான் பாடலில் திடீர் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் மடோனா செபாஸ்டியன் அந்த பாடல் சூட்டிங் முடிந்த உடனே நான் நடிப்பது லீக் ஆகி விட்டது. ஆனாலும், கடைசி வரை அதை சர்ப்ரைசாக படக்குழுவினர் கொண்டு சென்று ரசிகர்களுக்கு சேர்த்தது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி என்றுள்ளார். ஜீன்ஸ் சர்ப்ரைஸ் லியோ படத்தில் இடம்பெற்று ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளது.

குழந்தை மாதிரி: நடிகர் விஜய் சூட்டிங் ஸ்பாட்டில் குழந்தை போல இருப்பார் என்றும் ஆக்ஷன் சொன்னவுடன் ஆளே மாறிவிடுவார் என்றும் மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் எங்களை வேற ஒரு உலகத்துக்கே கூட்டிச் சென்று விடுவார். அர்ஜுன் சாரை செட்டில் பார்க்கவே பயமாக இருக்கும். முதல்வன் படத்தை பற்றியெல்லாம் பேசினோம். சஞ்சய் தத் ரொம்பவே ஸ்வீட் என அந்த பேட்டியில் லியோவில் நடித்த அனுபவத்தைக் கூறியுள்ளார் மடோனா செபாஸ்டியன்.


Click it and Unblock the Notifications











