விஜய்யின் ‘தளபதி 65’.. பிரேமம் பட நடிகைக்கு கிடைத்த செம ஜாக்பாட்.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: தளபதி 65 படத்தில் பிரேமம் படத்தில் நடித்த பிரபல நடிகை நடிக்கப் போவதாக தீயாய் தகவல் ஒன்று பரவி வருகிறது.
மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தியேட்டர்கள் திறப்புக்காக அந்த படமும் தமிழ் சினிமா ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றனர்.
சமீபத்தில், தயாரிப்பாளர் கேயார் மாஸ்டர் படம் முதல் படமாக ரிலீசாகக் கூடாது என கூறியிருந்தது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை கிளப்பியது.

கொரோனா பரவும்
தமிழ்நாட்டில் அதிகப்படியான ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் முதல் படமாக ரிலீசானால், தியேட்டரில் கூட்டத்தையோ, சமூக இடைவெளியையோ கடைபிடிக்க முடியாது என்ற நோக்கிலே தான் சொன்னதாகவும் கேயார் விளக்கம் அளித்திருந்தார். சிறு பட்ஜெட் படத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

வைரலான வதந்திகள்
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் இருந்தே தளபதி 65 படத்தை அந்த இயக்குநர் இயக்கப் போகிறார், இவர் இயக்கப் போகிறார் என பல தரப்பட்ட கருத்துக்களும், வதந்திகளும் வைரலாகின. தற்போது இறுதியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

தமன் இசை
ஆனால், தளபதி 65 படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ள தகவல் மட்டும் இதுவரை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தனது டிவிட்டர் பக்கத்திலும், சில மீடியாக்களுக்கும் பேட்டி அளித்துள்ளார். ஆனால், இது துப்பாக்கி 2 இல்லை என்றும், சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

பூஜா ஹெக்டே
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் புதிய கதையாக உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. அதனை உறுதி செய்யும் விதத்தில் சமீபத்தில், தான் அருவா படத்தில் நடிக்க வில்லை என்றும், சில பெரிய படங்களில் இந்த வருடம் தமிழ் சினிமாவில் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

பிரேமம் ஹீரோயின்
இந்நிலையில், தற்போது, பிரேமம் படத்தில் நிவின் பாலியை மணந்து கொள்ளும் ஹீரோயின் மடோனா சபாஸ்டியன் தளபதி 65 படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் ஒன்று வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடோனா சபாஸ்டியன்
தமிழில் விஜய்சேதுபதியின் காதலும் கடந்து போகும், கவண் படத்தில் நாயகியாக நடித்துள்ள மடோனா சபாஸ்டியன், லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான மணிரத்னத்தின் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார். சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம் டா படத்தில் நாயகியாக நடித்துள்ள மடோனா சபாஸ்டியனுக்கு விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு ஜாக்பாட் ஆன ஒன்று தான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கின்றனர்.
Recommended Video

விஜய் பிறந்தநாள்
தளபதி விஜய்யின் பிறந்த நாள் இம்மாதம் 22ம் தேதி வரவுள்ள நிலையில், மாஸ்டர் படம் குறித்தும், தளபதி 65 படம் பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என தமிழ் சினிமாவும் விஜய் ரசிகர்களும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் டீசர் அல்லது டிரைலரை ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











