Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கௌதம் மேனன் தயாரிப்பு... 'மெட்ராஸ் சென்ட்ரல்' சுதாகரின் 'அருமையான படம்'
சென்னை : யூ-ட்யூபில் 'மெட்ராஸ் சென்ட்ரல்' சேனல் பயங்கர பிரபலம். அரசியல்வாதிகளை செமையாக கலாய்த்து வெளியாகும் 'பரிதாபங்கள் சீரிஸ்' ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
'மெட்ராஸ் சென்ட்ரல்' சேனலின் கோபி, சுதாகர் கூட்டணி கலக்கல் காமெடிகளுக்குப் பெயர் போனவர்கள். இவர்கள் இணைந்து சமீபத்தில் 'ஹாஃப் பாயில்' எனும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், சுதாகர் வேறொரு வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். 'வீக்கெண்ட் மச்சான்' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸை கௌதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. கௌதம் மேனன் சமீபமாக ஷார்ட் பிலிம்ஸை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
'வீக்கெண்ட் மச்சான்' வெப் சீரிஸின் முதல் எபிஸோடான 'அருமையான படம்' வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந்த வெப் சீரிஸின் மூலம் சுதாகர் கௌதம் மேனன் தயாரிப்பில் நடித்துள்ளார்.
'அருமையான படம்' எபிஸோட், படங்களை விமர்சனம் செய்யும் இன்ஸ்டன்ட் விமர்சகர்களை கலாய்த்து உருவாகி இருக்கிறது. விமர்சகர்களின் அட்ராசிட்டிகளை பார்த்து கடுப்பானவர்களா நீங்கள்? இந்த எபிஸோடை பார்த்து உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யலாம்.