50 நாட்களைத் தாண்டிய கார்த்தியின் மெட்ராஸ்!

By Shankar

ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான மெட்ராஸ் திரைப்படம் 50 நாட்களை வெற்றிகரமாகத் தாண்டியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான வித்தியாசமான, சமூக அக்கறை கொண்ட படங்களுள் ஒன்றாக பாராட்டப்பட்ட படம் மெட்ராஸ்.

madras

சென்னையின் பூர்வகுடி மக்களை, அவர்களின் வாழ்வியலை, அரசியலை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருந்தார் இயக்குநர் ரஞ்சித்.

சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டினர். கார்த்தி முழுக்க முழுக்க வடசென்னை இளைஞராகவே வாழ்ந்திருந்தார் படத்தில்.

ஸ்டுடியோகிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்த இந்தப் படம் நல்ல வசூலுடன் 50 நாட்களைத் தாண்டியுள்ளது. மாற்றுப் பொழுதுபோக்குகள் மலிந்துவிட்ட இன்றைய சூழலில் 50 நாட்களைத் தாண்டுவதென்பது எப்படிப்பட்ட சாதனை என்பதை தமிழ் சினிமா நன்கறியும்.

madras

எஸ்கேப், பிவிஆர், மாயாஜால், சீனிவாசா ஆகிய அரங்குகளில் இந்தப் படம் 50 நாட்களைத் தாண்டியுள்ளது. இவை தவிர, மேலும் 6 அரங்குகளில் ஷிப்டிங் முறையில் 50 நாட்களைத் தாண்டியுள்ளது மெட்ராஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X