For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வணக்கம் வாழ வைக்கும் சென்னை.. மகேஷ் பாபு முதல் அல்லு அர்ஜுன் வரை.. இத்தனை பேர் சென்னைக்காரர்களா?

  |

  சென்னை: சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரை போல வருமா என டோலிவுட்டில் டாப் நடிகர்களாக வலம் வரும் முக்கால்வாசி பேர் சென்னையில் தான் படித்து வளர்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

  ஆம், அதுதான் நம்ம சிங்கார சென்னையின் ஸ்பெஷலே.. இப்போ கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித்தே ஹைதராபாத்துக்கு ஷூட்டிங் பறக்கின்றனர்.

  ஆனால், அப்போதெல்லாம் சென்னையில் தான் பாலிவுட், டோலிவுட், மல்லுவுட் மற்றும் சாண்டில்வுட் படங்கள் எடுக்கப்பட்டன.

  அர்த்தம் புரியல...ஆனாலும் சூப்பர்...சென்னை தமிழில் லோக்கலாக ஆட்டம் போட வைத்த தமிழ் சினிமா பாடல்கள் அர்த்தம் புரியல...ஆனாலும் சூப்பர்...சென்னை தமிழில் லோக்கலாக ஆட்டம் போட வைத்த தமிழ் சினிமா பாடல்கள்

  சொர்க்கமே என்றாலும் சென்னை போல வருமா

  சொர்க்கமே என்றாலும் சென்னை போல வருமா

  நதியாக ஓடிய கூவத்தை சாக்கடையாக பலர் மாற்றினாலும், வேலையைத் தேடி கடைசி பஸ் ஏறும் கார்த்திக்கிற்கு எல்லாம் இயக்குநர் அந்தஸ்த்தை தருவது நம் சிங்கார சென்னை தான். இந்தியாவின் பல மாநிலங்களில் மட்டுமின்றி உலக நாட்டவர் பலர் குடியிருக்கும் ஒரு நகரமாக சென்னை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  சிவாஜி ராவை சூப்பர்ஸ்டார் ஆக்கிய சென்னை

  சிவாஜி ராவை சூப்பர்ஸ்டார் ஆக்கிய சென்னை

  கன்னட படங்களில் வில்லனாக நடிக்க சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் படிக்க வந்த சிவாஜி ராவை ரஜினிகாந்தாகவும் சூப்பர்ஸ்டாராகவும் மாற்றிய பெருமை சென்னை மண்ணுக்குத் தான் உண்டு. மதுரைக்காரன் நான் என மார்தட்டிக் கொள்ளும் பலருக்கு சினிமாவில் அட்ரஸ் வாங்கித் தந்ததே சென்னை தான்.

  டோலிவுட் சூப்பர்ஸ்டார்

  டோலிவுட் சூப்பர்ஸ்டார்

  கோலிவுட் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமில்லை டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு பிறந்தது, வளர்ந்தது, படித்தது என எல்லாமே சென்னையில் தான். சென்னையில் உள்ள செயிண்ட் பீட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தவர் தான் இந்த சர்காரு வாரிபாட்டா ஹீரோ. சென்னைத் தமிழ் அவருக்கு இப்போதும் நல்லாவே பேசத் தெரியும் என்பது கூடுதல் தகவல்.

  புஷ்பா புயலும்

  புஷ்பா புயலும்

  1982ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தான் புஷ்பா படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன். சென்னையில் உள்ள செயிண்ட் பேட்ரிக் பள்ளியில் தான் படித்து வளர்ந்தார். புஷ்பா படத்திற்கு டப்பிங் பேச அந்த தமிழ் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

  சமந்தா - நாக சைதன்யா

  சமந்தா - நாக சைதன்யா

  புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சிக் குத்தாட்டம் போட்ட சமந்தாவும் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பொண்ணு தான். அவரை திருமணம் செய்து கொண்டு பிரிந்த நடிகர் நாக சைதன்யாவும் பிறந்தது மற்றும் வளர்ந்தது சென்னையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  பாகுபலி பிரபாஸ்

  பாகுபலி பிரபாஸ்

  பாகுபலி படத்தில் நடித்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸும் சென்னைக்காரர் தான். ஆதிபுருஷ், சலார், புராஜெக்ட் கே என நடிச்சா 400 கோடிக்கு மேல் உள்ள பட்ஜெட் படங்களில் தான் நடிப்பேன் என அதகளம் செய்து வரும் பிரபாஸ் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். டோலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்கும் பாலமாக எப்போதுமே சென்னை இருந்து வந்திருக்கிறது.

  ஆர்ஆர்ஆர் ராம்சரண்

  ஆர்ஆர்ஆர் ராம்சரண்

  நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணும் பிறந்தது சென்னையில் தான். இதுபோல ஏகப்பட்ட டோலிவுட் நடிகர்கள் மற்றும் சில பாலிவுட் நடிகர்களின் பூர்வீகமாக சென்னை உள்ளது. டோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இவர்கள் மாறினாலும், இப்போதும் இவர்கள் படங்கள் வெளியானால் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் வசூலை தமிழ்நாடும் தாராளமாக வாரிக் கொடுப்பதற்கு இந்த சென்னை பந்தமும் ஒரு காரணமகா இருக்கும் என அவர்களே நம்புகின்றனர். புரமோஷனுக்கு சென்னைக்கு வரும்போதெல்லாம் தமிழில் பேசி மக்களை கவர்கின்றனர்.

  English summary
  Madras Day 2022: Tollywood Star actors like Mahesh Babu, Allu Arjun, Ramcharan, Naga Chaitanya, Samantha and Prabhas all are born in Chennai only. They also studied and grew up in Chennai.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X