Madras Day: படிச்சவனுக்கு IT கம்பெனி.. படிக்காதவனுக்கு nighty கம்பெனி.. சென்னையை கொண்டாடிய படங்கள்!

சென்னை: Madras Day 2023( சென்னை தினம் 2023) தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து வரும் சென்னையை கொண்டாடும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 'சென்னை தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கு, ஆனால், சென்னை என்றாலே ஸ்பெஷல் தான். படிச்சவனுக்கு ஐடி கம்பெனி, படிக்காதவனுக்கு நைட்டி கம்பெனி என சென்னையை நாடி வந்தவர்களை வாழவைத்த ஊர் தான் நம்ம ஊரு மெட்ராசு.

madras day 2023: Top five Chennai based Tamil movies

இன்று 384வது சென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையை மையமாக வைத்து வெளியான படங்களைப் பார்க்கலாம்.

மெட்ராஸ்: சென்னையை மையப்படுத்தி படங்கள் என்றதும் நம் பெரு மூளையை தட்டும் முதல் படம் கார்த்தி நடித்த மெட்ராஸ் படம் தான். 2014ம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தின் கதைக்கருவே சுவர் தான். வடசென்னையில் இருக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் இருக்கும் ஒரு பெரிய சுவரால்,அந்த பகுதி மக்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதையும், சென்னை பற்றிய சில புரிதல்களையும் சொல்லி இருப்பார் இயக்குனர் ரஞ்சித்.

madras day 2023: Top five Chennai based Tamil movies

மதராச பட்டிணம்: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே.. என்று மதராச பட்டிணம் படத்தில் வரும் அழகான பாடலைப்போல, இந்த படத்தில் அழகான அமைதியான சென்னையை காட்டி இருப்பார் இயக்குநர். இந்த படத்தில் எமி ஜாக்சன், ஆர்யா, நாசர், சதீஷ் ஆகியோர் நடித்திருந்தனர். சுதந்திரத்திற்கு முன் சென்னை ஆங்கில கவர்னரின் மகள் எமி ஜாக்சன் ஆர்யா மீது காதல் கொள்கிறார். இவர்களின் காதல் என்ன ஆனது என்பதை அழகான காதலுடன் இந்த படம் சொல்லும்.

madras day 2023: Top five Chennai based Tamil movies

சென்னை 28: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தில் ஜெய் , சிவா , பா.ரஞ்சித் , பிரேம்ஜி , அரவிந்த் ஆகாஷ் , நிதின் சத்யா என பலர் நடித்துள்ளனர். நட்பு, கிரிக்கெட், காதல், காமெடி என கமர்ஷியல் திரைப்படமாக உருவாக இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் 2016ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது.

madras day 2023: Top five Chennai based Tamil movies

வடசென்னை: பெருநகரமாகிவிட்ட சென்னையை, தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என பிரித்து வைத்து இருக்கிறார்கள். இதில் வடசென்னைக்கு என்று தனி கெத்து உண்டு அதை சொன்ன திரைப்படம் தான் தனுஷ் நடித்த வடசென்னை. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் என பலர் நடித்துள்ளனர். அசால்ட்டு, சம்பவம், சாமான் என வடசென்னைக்கு நாம் கொடுத்திருக்கும் அழுக்கு முகத்தின் பின்னரசியலை இப்படத்தில் தோலுறித்து காட்டி இருப்பார் இயக்குநர் வெற்றி மாறன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X