twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    madras day 22..திரையில் மெட்ராஸ் பாஷை பேசிய சந்திரபாபு..அசத்திய சோ, தேங்காய், சுருளிராஜன், லூஸ்மோகன்

    |

    மெட்ராஸ் டே கொண்டாடும் நாளில் மெட்ராஸ் பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்திய பல நடிகர்கள் பல காலக்கட்டங்களில் கலக்கியுள்ளனர்.

    Recommended Video

    Maniratnam Interesting Facts |Maniratnam பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | #Celebrity |Filmibeat Tamil

    தமிழ் சினிமாவில் முதன் முதலில் மெட்ராஸ் பாஷை பேசி அசத்தியவர்களில் முதலிடம் சந்திரபாபுவுக்கு உண்டு. அடுத்து சோ, தேங்காய், சுருளிராஜன், லூஸ் மோகன் என பலரும் கலக்கியுள்ளனர்.

    கதாநாயகனாக நடித்த கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல படங்களில் மெட்ராஸ் பாஷை பேசி அசத்தியுள்ளார். சமீப படங்களில் ஜனகராஜ் மெட்ராஸ் பாஷையை இயல்பாக பேசியவர் எனலாம்.

    “உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்“..ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய அஜித்!“உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்“..ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய அஜித்!

    சென்னையின் முக்கிய அடையாளம் மெட்ராஸ் பாஷை

    சென்னையின் முக்கிய அடையாளம் மெட்ராஸ் பாஷை

    சென்னையில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வந்தனர். சென்னையில் இதையெல்லாம் தாண்டி சென்னையின் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து குடியேறிய மக்கள் பல மொழிகளை கலந்து ஒரு தமிழை உருவாக்கியிருந்தார்கள். அது மெட்ராஸ் பாஷை என்று அழைக்கப்பட்டது. எளிய மக்களின் குடிசை வாழ் மக்களின் பாஷையாக இருந்த அந்த பாஷை சினிமாவில் நகைச்சுவைக்காக எடுத்து கையாளப்பட்டது.

    மெட்ராஸ் பாஷையை திரையுலகில் புகுத்திய நடிகர் சந்திர பாபு

    மெட்ராஸ் பாஷையை திரையுலகில் புகுத்திய நடிகர் சந்திர பாபு

    இதை பல நடிகர்கள் நகைச்சுவைக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் ஆனாலும் இந்த பாஷையை மிகவும் பிரபலபடுத்தியது என்றால் சென்னை சாந்தோமில் பிறந்து வளர்ந்த இளைஞரான நடிகர் சந்திரபாபு தான். இயல்பாகவே அவருக்கு சென்னை தமிழ் வரும் என்பதால் சினிமாவில் அதை பயன்படுத்தினார். அவருக்குப்பின் நடிகர் சோ பயன்படுத்தியிருப்பார். சோவின் ஜாம்பஜார் ஜக்கு மிக பிரபலமான பாத்திரம். அதேபோன்று நடிகர் சுருளிராஜன், நடிகர் லூஸ் மோகன் உள்ளிட்ட பலர் சென்னை பாஷை பேசி இருப்பார்கள்.தேங்காய் சீனிவாசன் சென்னை பாஷை பேசுவதில் மிக பிரபலமானவர். நடிகர் ஜனகராஜ் 80 களின் பிற்பாதியில் அழகாக மெட்ராஸ் பாஷை பேசி நடித்து கலக்கினார்.

    ஆண் நாயகர்களுக்கு இணையாக மெட்ராஸ் பாஷை பேசிய மனோரமா

    ஆண் நாயகர்களுக்கு இணையாக மெட்ராஸ் பாஷை பேசிய மனோரமா

    தமிழ் சினிமா கதாநாயகன் என்று எடுத்துக்கொண்டால் நடிகர் கமல்ஹாசன் மிக சிறப்பாக சென்னை பாஷை பேசி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் எனலாம். பெண் நடிகைகள் என எடுத்துக்கொண்டால் நடிகை மனோரமா அவரை மிஞ்சி மெட்ராஸ் பாஷை பேசியது யாரும் இல்லை எனலாம். "கம்முன்னு கெட" என்கிற அவருடைய பிரதான வசனம் "வா வாத்யாரே ஊட்டாண்ட" பாடலும் மிகவும் பிரசித்தி பெற்றது. பொம்பள சிவாஜின்னு பெயரெடுத்தவர் சிவாஜி கூட மெட்ராஸ் பாஷை பேசியதில்லை, ஆனால் மனோரமா மெட்ராஸ் பாஷையில் கலக்கியிருப்பார். மெட்ராஸ் பாஷை எளிய மக்களின், அன்றாடங்காய்ச்சிகளின் பேச்சாக இருந்தது. அதில் பல தூய தமிழ் வார்த்தைகள் இருந்தன உட்கார் என்பதற்கு குந்து என்று சொல்வார்கள் இது தமிழில் மிக பழமையான வார்த்தை என்று சொல்வார்கள். தமிழுக்கு சிறப்பான 'ழ' மெட்ராஸ் பாஷையில் இருக்காது.

    சந்திரபாபுவின் அசால்ட் நடிப்பு

    சந்திரபாபுவின் அசால்ட் நடிப்பு

    நடிகர் சந்திரபாபு முதன்முதலில் சபாஷ் மீனா படத்தில் மெட்ராஸ் பாஷையை கையாண்டிருப்பார். சபாஷ் மீனாவில் சந்திரபாபுவுக்கு இரட்டை வேடம் ஒருவர் மாடர்ன் இளைஞராக சிவாஜிகணேசனின் நண்பராகவும், இன்னொருவர் கைரிக்‌ஷாகாரராக மூக்கன் கேரக்டரில் மனைவி குழந்தைகளுடன் குடிசையில் வசிப்பவராக நடிப்பார். கைரிக்‌ஷா சந்திரபாபு அனைவரிடமும் தகராறு செய்பவராக வருவார். "மூஞ்சில என் கைய வைக்க" என்ற வார்த்தையை படத்தில் அடிக்கடி பயன்படுத்துவார். ஒரு காட்சியில் இரண்டு சந்திரபாபுவும் இடம் மாறி விட மெட்ராஸ் பாஷை பேசும் கைரிக்‌ஷா மூக்கன் சந்திரபாபு காதலியின் பணக்கார வீட்டில் அடைக்கலம் ஆவார்.

    மூஞ்சில என் கைய வைக்க சந்திரபாபுவின் பிரபலமான வசனம்

    மூஞ்சில என் கைய வைக்க சந்திரபாபுவின் பிரபலமான வசனம்

    அவரை காதலர் சேகர் பித்து பிடித்துவிட்டது என்று நினைத்து கதாநாயகி மருத்துவரை அழைத்து வந்து பார்ப்பார். ஒரு குண்டா சோற்றை ஒரு பிடி பிடிப்பார் மூக்கன் சந்திரபாபு, மிரண்டுபோய் சரோஜாதேவி பார்ப்பார் என்ன அந்த பொண்ணு அப்படி பாக்குதுன்னு சந்திரபாபு கேட்பார். நீங்க ரொம்ப கம்மியா சாப்பிடுறீங்களேன்னு கவலைப்படுகிறார் அம்மா என ஒரு வேலைக்காரர் சொல்ல என்ன பண்றதுப்பா உடம்பு கொஞ்சம் சரியில்லை இல்லாட்டி இதை விட ரெண்டு மடங்கு ரவுண்டு கட்டி அடிப்பேன்னு சந்திரபாபு சொல்லுவார். சாப்பிட்ட பின்னர் கைரிக்‌ஷாவை இழுத்து பங்களாவுக்குள் வாக்கிங் போவார். அப்போது அந்த வழியாக வரும் சிவாஜி கணேசன் கைரிக்‌ஷா சந்திரபாபுவை தன் நண்பன் சேகர் என நினைத்து டேய் சேகர் என்று அழைப்பார். "என்னடா என்ன பேர் சொல்லிக் கூப்பிடுறே, உள்ளே சோறு போடுறவன் என்ன சொல்றான் தெரியுமா மாப்ளன்னு சொல்றாண்டா, உன் மூஞ்சில என் கைய வைக்கன்னு" சிவாஜியை அடிப்பார் சந்திரபாபு.

    ஜாம்பஜார் ஜக்கு ரவுடி சோ-வின் மெராஸ் பாஷை

    ஜாம்பஜார் ஜக்கு ரவுடி சோ-வின் மெராஸ் பாஷை

    அதன் பின்னர் பல படங்களில் சந்திரபாபு இதுபோல் நடித்திருந்தார். முதன்முதலில் சென்னை பாஷையை கொண்டு வந்த பெருமை அவருக்கு உண்டு. அதேபோல் நடிகர் சோ தன்னுடைய திரைப்படங்களில் சென்னை தமிழ் பேசும் லோக்கல் ரவுடி போல் இறால் மீசை வளர்ந்து, லுங்கி, ஜிப்பான்னு பட்டையை கிளப்பியிருப்பார். ஜெய்சங்கர், ஜெயலலிதா நடித்த பொம்மலாட்டம் படத்தில் ஜாம்பஜார் ஜக்கு என்கிற கேரக்டரில் மிரட்டல் ரவுடி போல் வருவார். உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் ரவுடி கெட்டப்பை மெயிண்டெய்ன் பண்ணும் பாத்திரம். இந்த ஜாம்பஜார் ஜக்கு யாருன்னு தெரியுமா என வில்லன்களை மிரட்டுவார். அவர்கள் தாக்கியவுடன் அப்படியே காலில் விழுவார். படம் முழுவதும் மெட்ராஸ் பாஷை பேசிக்கொண்டு இருப்பார் அவரை மனோரமா துரத்தி துரத்தி காதலிப்பார். அப்போது மனோரமா "வா வாத்தியாரே வூட்டாண்ட, வராங்காட்டினா நான் உடமாட்டேன், ஜாம்பஜார் ஜக்கு நான் சௌக்கார்பேட்ட கொக்கு"ன்னு பாடும் பாடல் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். அதற்கு பின்பும் பல படங்களில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்துள்ளார் நடிகர் சோ.

    மெராஸ் பாஷையில் கலக்கிய தேங்காய் சீனிவாசன்

    மெராஸ் பாஷையில் கலக்கிய தேங்காய் சீனிவாசன்

    சந்திரபாபுவை தாண்டி மிக அழகாக மெட்ராஸ் பாஷை பேசியவர்களில் முதன்மையானவர் தேங்காய் சீனிவாசன் என்று சொல்லலாம். பல படங்களில் அவர் எளிதாக மெட்ராஸ் பாஷை பேசுவார். அவர் உடல் மொழியும் அதே போன்று இருக்கும். அதில் முக்கியமானது காசேதான் கடவுளடா படத்தில் ஜெயிலில் இருந்து வரும் கைதியாக முத்துராமன் ஸ்ரீகாந்த் நண்பராக பணத்தை திருட வருவார். சாமியார் வேஷம் போடுவார், அந்த சாமியார் வேஷத்தில் மெட்ராஸ் பாஷை கலந்து தேங்காய் சீனிவாசன் அடிக்கும் லூட்டிகள் செம காமெடி. "ஜம்புலிங்கமே ஜடாதரா" பாடலில் தேங்காய் சீனிவாசன் மெட்ராஸ் பாஷை கலந்து பாடுவதும் அதை சமாளித்து முத்துராமனும், ஸ்ரீகாந்தும் பாடுவதும் கடைசியில் மனோரமா உடன் நகை லாக்கர்களை ஒவ்வொன்றாக திறக்க செல்லும் பொழுது மெட்ராஸ் பாஷை கலந்து மந்திரச்சொல் பேசுவதும் அமர்க்களம். அதன் பின்னர் பல படங்களில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்துள்ளார். எம்ஜிஆருடன் ரிக்‌ஷாகாரன், நினைத்ததை முடிப்பவன் படங்களில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்திருப்பார்.

    மெட்ராஸ் பாஷையில் சுருளிராஜனின் ஆதிக்கம்

    மெட்ராஸ் பாஷையில் சுருளிராஜனின் ஆதிக்கம்

    இவர்களுக்கு அடுத்து மெட்ராஸ் பாஷையை திரையில் கலக்கிய மிக முக்கிய நட்சத்திரம் நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் இவர் மெட்ராஸ் பாஷை பேசி நடித்தால் அது அப்படியே அட்சரம் பிசகாமல் அவருக்கு பொருந்தும். திருமலை தென்குமரி உள்ளிட்ட படங்களிலும் அதன் பின்னர் சட்டம் என் கையில் உள்ளிட்ட பல படங்களில் சுருளிராஜன் பேசிய மெட்ராஸ் பாஷையும், அவருடைய உடல்மொழியும் மிகச் சிறப்பாக இருக்கும். சோ தனது மேடை நாடகங்களில் மெட்ராஸ் பாஷை பேசும் கேரக்டரை வைத்திருப்பார். அவரது கூவம் நதிக்கரையினிலே வரும் மன்னாரு கேரக்டர் அழகாக மெட்ராஸ் பாஷை பேசும்.

    மெராஸ் பாஷைக்கு என்றே அவதாரம் எடுத்த லூஸ் மோகன்

    மெராஸ் பாஷைக்கு என்றே அவதாரம் எடுத்த லூஸ் மோகன்

    இவை எல்லாவற்றையும் தாண்டி மெட்ராஸ் பாஷைக்கென்றே பிறந்தவர் அதை தாண்டி வேறு எதையும் பேசாதவர் என்று பெயரெடுத்தவர் லூஸ் மோகன் மெட்ராஸ் பாஷை என்றால் லூஸ் மோகன் தான் என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக நடித்தவர். இத்தனைக்கும் மயிலாப்பூரில் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து எல்ஐசியில் பணியாற்றிய அவர் எப்படி இவ்வளவு அழகாக மெட்ராஸ் பாஷை பேசினார் என்று அனைவரும் வியந்து போனதுண்டு. நடிகர் கமல்ஹாசன் தனது படங்களின் மெட்ராஸ் பாஷை பேசி நடிக்க முயற்சி எடுத்த பொழுது அவருக்கு குருவாக இருந்து சொல்லிக் கொடுத்தவர் நடிகர் லூஸ் மோகன். கடைசி வரை அவருடைய நடிப்பும், அந்த மேனரிசம் மெட்ராஸ் பாஷையும் மக்களால் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது.

    ஜனகராஜின் மெட்ராஸ் பாஷை

    ஜனகராஜின் மெட்ராஸ் பாஷை

    இவர்களுக்கு அடுத்து மெட்ராஸ் பாஷையில் கலக்கிய முக்கிய நடிகர் ஜனகராஜ் எனலாம். 80 களின் பிற்பகுதியில் நகைச்சுவை நடிகரான அவர் அதன் பின்னர் பல படங்களில் மெட்ராஸ் பாஷை பேசி கலக்கியுள்ளார். ரஜினியின் படிக்காதவன், ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களை சொல்லலாம். இது தவிர பாரதிராஜாவின் என்னுயிர் தோழன் படத்தில் நடிகர் பாபு மிக இயல்பாக மெட்ராஸ் பாஷை பேசி நடித்திருப்பார். தற்போது நடிக்கும் பல நடிகர்கள் மெட்ராஸ் பாஷை தவிர எதுவும் பேசுவதில்லை. ஏனென்றால் திரைப்பட பாஷையே மெட்ராஸ் பாஷையாக மாறி விட்டது.

    மெட்ராஸ் பாஷையில் கலக்கிய கமல்ஹாசன்

    மெட்ராஸ் பாஷையில் கலக்கிய கமல்ஹாசன்

    கதாநாயகர்களில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்தவர் என்றால் உலக நாயகன் கமல்ஹாசன் தான். ஆரம்ப காலங்களில் அவர் நடித்த பல படங்களில் சிறப்பாக பேசியிருப்பார். சட்டம் என் கையில் படத்தில் அமெரிக்க ரிட்டர்ன் கமல், மெட்ராஸ் கமல் என்று இருவேடம். சென்னை குடிசைப் பகுதியில் வசிக்கும் இளைஞராக நடித்த கமல் ஹாசன் சுருளிராஜன் உடன் சேர்ந்து மெட்ராஸ் பாஷை பேசி கலக்கும் காட்சிகள் வெகுவாக ரசிக்கப்பட்டது. அதற்கு பிறகு சவால் படத்தில் மனோரமாவுடன் சேர்ந்து மெட்ராஸ் பாஷை பேசி நடித்து இருப்பார். வசூல் ராஜா எம்பிபிஎஸ்-சில் கமல் அசால்டாக மெட்ராஸ் பாஷை பேசுவார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் இவர்கள் அனைவருடன் சேர்ந்து கலக்கியவர் மனோரமா. அவரைப்போல் யாரும் மெட்ராஸ் பாஷை பேச முடியாது. அதில் அட்ராசிட்டி என்றால் பொம்மலாட்டம், சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்களைச் சொல்லலாம்.

    தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மெட்ராஸ் பாஷை

    தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மெட்ராஸ் பாஷை

    இப்படி சென்னை தமிழ் என்பது மெட்ராஸ் பாஷையாக சென்னையில் தமிழுக்கு ஒரு முக்கிய அடையாளமாக இருக்கிறது. அது திரையிலும் பலராலும் பேசப்பட்டு மிக சிறப்பாக ரசிக்கப்பட்டது. சென்னைக்கு பல நடிகர்கள் பல கலைஞர்கள் வந்து நடித்தாலும் சினிமாவின் பிரதான மொழியாக இருந்தது தஞ்சாவூர் தமிழ்தான். அதன் பின்னர் மதுரை தமிழ், தென்மாவட்ட தமிழ், கொங்குதமிழ் என பேசப்பட்டாலும் தஞ்சாவூர் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தது. தற்போது அது மாறி சினிமாவில் சென்னை தமிழை ஆதிக்கம் செலுத்துகிறது. குஷ்ட்டியா (குடித்தாயா) புஷ்டியா (பிடித்தாயா) மாமு, மாமே, டுபாகூர் என சென்னை தமிழ் கலந்து அனைத்து நடிகர்களும் பேசுவதைக் காண முடிகிறது. திரையுலகில் தஞ்சாவூர் தமிழ் இல்லாது போய்விட்டது. ஆங்கிலம் கலந்து பேசும் தங்கிலிஷ், சென்னை தமிழ் திரையுலகின் பாஷையாக தற்போது மாறியுள்ளது.

    English summary
    Chandrababu has the distinction of being the first in Tamil cinema to speak Madras Slang. Later Cho, Thengai Sreenivasan, Surulirajan, Loose Mohan and many others mixed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X