நடிகை அஞ்சலியை 15 நாளில் ஆஜர்படுத்த போலீசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு...

ஆந்திராவிற்கு படப்பிடிப்புக்கு சென்ற நடிகை அஞ்சலி திடீரென்று மாயமானார். அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட கோரி அவரது சித்தி எஸ்.பாரதிதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகை அஞ்சலியை 15 நாட்களுக்குள் கண்டுபிடித்து ஆஜர்படுத்தவேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
ஹைதராபாத்தில் ஆஜர்
இதனிடையே, நடிகை அஞ்சலி, ஹைதாபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் இன்று ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி அஞ்சலி ஆஜராகும் பட்சத்தில் அவரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications