twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்ச்சைக்குள்ளான அமலா பாலின் அந்த புகைப்படங்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் திடீர் தடை!

    By
    |

    சென்னை: அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    நடிகை அமலா பால், இயக்குநர், ஏ.எல்.விஜயை காதலித்து சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

    பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இது தமிழ், மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரிலீஸுக்கு வெயிட்டிங்

    ரிலீஸுக்கு வெயிட்டிங்

    தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார், அமலா பால். ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது, அதோ அந்த பறவை போல ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

    வெப்சீரிஸ் ரீமேக்

    வெப்சீரிஸ் ரீமேக்

    மலையாளத்தில், பிருத்விராஜுடன் ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிசின் ரீமேக்கில் நடித்துள்ளார். விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள அமலா பால், மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    திருமணம் வதந்தி

    திருமணம் வதந்தி

    இவர் பாவ்னீந்தர் சிங் என் பாடகரை திருமணம் செய்து கொண்டதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இது தொடர்பான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவின. அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பவனிந்தர் சிங்கே வெளியிட்டார். ஆனால், அந்த திருமணம் பற்றி வதந்தி என்று சொன்னார் அமலா பால்.

    திடீரென நீக்கினார்

    திடீரென நீக்கினார்

    பின்னர், அந்தப் புகைப்படங்களை திடீரென நீக்கினார் பவனிந்தர். புகைப்படங்களை வெளியிட்ட பவ்னிந்தர் சிங்கிடம் நஷ்ட ஈடு கோரி நடிகை அமலா பால் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கு தொடர்ந்தார்.

    Recommended Video

    தம்மாத்துண்டு டிரெஸ்ல இன்னாம்மா டான்ஸ் ஆடுறாரு அமலா பால்! - வீடியோ
    தடை விதித்தார்

    தடை விதித்தார்

    இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, நடிகை அமலா பாலின் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்க்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மனு தொடர்பாக பவ்னிந்தர் டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

    English summary
    Madras HC stays Bhavninder Singh from posting Amala Paul's engagement pics on social media
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X