நயன்தாரா ஆவணப்படம் விவகாரம்.. எப்போது இறுதி தீர்ப்பு தெரியுமா.. காத்திருக்கும் தனுஷ்!
சென்னை: நயன்தாராவின் திரையுலக பயணம் குறித்தும், திருமணம் குறித்தும் விளக்கும் ஆவணப்படமாக நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல் (Nayanthara beyond the fairy tale) கடந்தாண்டு அவரது பிறந்தநாளையொட்டி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இதில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்தது. இதனால், தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான நட்புறவு முறிந்தது. விக்னேஷ் சிவனும் எக்ஸ் தளத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்டார்.
ஆவணப்படம்: தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இருந்த பரபரப்பு நயன்தாராவின் ஆவணப்படத்தில் பெரிதாகவும் ரசிகர்களை கவரவில்லை என்றே கூறலாம். 21 ஆண்டு காலமாக சினிமாவில் தனித்தொரு பெண்ணாக கோலோச்சும் நடிகையின் திரையுலக பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம் வெறும் சடங்கிற்காக எடுக்கப்பட்டது போலவே இருக்கிறது. ஆரம்பத்தில் ஆர்வமாக இருந்தாலும் நீட்சியில் கவனம் செலுத்தப்படவில்லை என்றே கூறலாம்.

சர்ச்சை: நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியானதிலிருந்து இணையத்தில் பல்வேறு கிண்டல்களுக்கு ஆளானார் விக்னேஷ் சிவன். தனுஷை எதிர்த்து இன்ஸ்டாவில் பதிவிட்டார். அதற்கு எதிர்வினைகள் கடுமையாக இருந்ததால் அந்த பதிவினை உடனடியாக நீக்கினார். பின்பு நயன்தாராவும் இதுதெொடர்பாக அறிக்கையும் வெளியிட்டார். இப்படி பிரச்னைகள் நீண்டுகொண்டிருக்க நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விளம்பரத்தை தேடுகின்றனர் சினிமா விமர்சகர் ஒருவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
நடிகைகள் ஆதரவு: அதற்கு நயன்தாராவும் 3 குரங்குகள் என கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார். இப்படி நாளொரு வண்ணமும் பூதாகரமாக வெடித்தது. தனுஷ்க்கு எதிராகவும் நயன்தாராவுக்கு ஆதரவாகவும் தனுஷூடன் நடித்த நடிகைகளும் ரீட்வீட் செய்தனர். ஆனால், இதுவரை தனுஷ் இதற்கு எந்தவித பதிலோ கேள்விகளோ கேட்கவில்லை அமைதி காத்து வந்தார். நெட்டிசன்கள், ரசிகர்கள் சண்டை போட்டு மல்லுக்கட்டி கொண்டனர்.
நயன்தாரா விளக்கம்: தனுஷ் - நயன்தாரா இடையேயான பிரச்னை தீ பந்தம் பாேல் கொளுந்துவிட்டு எரிந்து அணைந்து போன நேரத்தில் நயன்தாரா இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்தார். அவர் அளித்த பேட்டியில், எனக்கு சரியென்று தோன்றும் ஒரு செயலை செய்ய நான் ஏன் பயப்பட வேண்டும்? பப்ளிசிட்டிக்காக ஒருவரது இமேஜை அழிக்கும் ஆள் நான் இல்லை. படத்தின் விளம்பரத்துக்காகவும் நான் அப்படி செய்வதும் கிடையாது.

அது என்னுடைய நோக்கம் அல்ல. அவரது நண்பர்கள், மேனேஜர் ஆகியோருக்கு ஏராளமான முறை தொலைபேசியில் அழைத்தோம். ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் எழுதிய நான்கு வரிகளை மட்டுமே நாங்கள் பயன்படுத்த விரும்பினோம். அது எங்களுக்கு மிகவும் பர்சனலான ஒன்றாக இருந்தது. இந்த ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என விரும்பினோம் என அவர் தெரிவித்தார்.
நட்பு: நாங்கள் இருவரும் பரம எதிரிகள் இல்லை. நாங்கள் நண்பர்களாகத்தான் இருந்தோம். கடந்த 10 ஆண்டுகளில் என்ன மாற்றம் வந்தது தெரியவில்லை. அதற்குள் நான் செல்லவும் விரும்பவில்லை. தனுஷ் ஒரு புகழ் பெற்ற நடிகர் நிறைய பேரால் நேசிக்கப்படுபவர். அதே அன்பும் மரியாதையும் நாங்களும் வைத்திருக்கிறோம் என தெரிவித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் நயன்தாரா.
வழக்கு: நயன்தாரா, தனுஷ், விக்னேஷ் சிவன் ஆகியோர் விளக்கம் கொடுத்தாலும் சட்டரீதியான பிரச்னைகள் இன்னும் தீரவில்லை. தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இதன் இறுதி விசாரணை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











