நீதி மன்றமே சொல்லிடுச்சு.. சிறகடிச்சு பறக்கும் ஜாய் கிரிசல்ட்டா.. ஏமாற்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ்

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், எனது மகனுக்கு அவர்தான் அப்பா என்றும் காவல்துறையிடம் முறையிட்டிருந்தார் ஜாய் கிரிசல்ட்டா. இது மட்டும் இல்லாமல், தொடர்ந்து சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் தனது சமூக வலைதளங்களிலும் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பதிவிட்டு வந்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை குறித்து ஜாய் கிரிசல்ட்டா அவதூறான கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்றும், மாதம்பட்டி என்ற பெயரைப் பயன்படுத்த கூடாது என்றும் தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

இப்படி இருக்கையில் இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த மனுவைத் தாக்கல் செய்த போது, ஜாய் கிரல்ட்டா சுமார் 6 மாத கால கர்ப்பிணியாக இருந்தார். தற்போது குழந்தை பிறந்து, சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

ஆனாலும் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜை தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் அட்டாக் செய்து வருகிறார். இப்படி இருக்கையில் மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் ஜாய் கிரிசல்ட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Madras High Court Dismissed Madhampatty Rangaraj s Case Seeking Ban On Joy Crizildaa For Defamatory Remarks

நீதிமன்ற உத்தரவு: அதாவது, " ஜாய் கிரிசல்ட்டா தன்னை தொடர்ந்து விமர்சித்து வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அவரது மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மாண்புமிகு நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதன் மூலம் பேச்சுரிமை காக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

டி.என்.ஏ: நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலர் அவரது இந்த போஸ்ட்டுக்கு இணையவாசிகள் பலர் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பலரும் ஜாய் கிரிசல்ட்டாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது என்றும், அவருக்கு அவர் தொடுத்த வழக்கில் நீதி கிடைக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், " ஜாய் கிரிசல்ட்டாவின் குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனையில் அதன் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று தெரியவந்தால், குழந்தைக்கான பராமரிப்பு செலவை தாங்களே ஏற்றுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X