twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரமின் ’கோப்ரா’ படம்.. இணையதளங்களில் வெளியிட தடை.. உயர் நீதிமன்றம் உத்தரவு

    |

    சென்னை: விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    Recommended Video

    Dhruv Vikram Speech | நீங்க கூப்பிடலனாலும் வந்திருப்பேன் | Cobra Trailer Launch | * Launch

    அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    கோப்ரா படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அந்த மாதிரி படம் அமைஞ்சிதுன்னா.. அதுக்கப்புறம் ரிடையர்டு ஆயிடலாம்.. புஷ்கர் -காயத்ரி சொன்னத பாருங்க! அந்த மாதிரி படம் அமைஞ்சிதுன்னா.. அதுக்கப்புறம் ரிடையர்டு ஆயிடலாம்.. புஷ்கர் -காயத்ரி சொன்னத பாருங்க!

    விக்ரமின் கோப்ரா ரிலீஸ்

    விக்ரமின் கோப்ரா ரிலீஸ்

    'மகான்' படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அஜய் ஞானமுத்து, கோப்ரா திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள 'கோப்ரா', செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. விக்ரம் பல தோற்றங்களில் நடித்துள்ள கோப்ரா படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்குமா?

    ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்குமா?

    அஜய் ஞானமுத்து இதற்கு முன்னர் இயக்கிய இரண்டு திரைப்படங்களுக்கும் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததோடு, ரசிகர்களிடமும் சிறப்பான வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து அவரது மூன்றாவது படமான கோப்ரா, விக்ரம், ஏ.ஆர். ரஹ்மான் என பிரம்மாண்டமான கூட்டணியில் வெளியாகவுள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விக்ரமும் சமீபத்தில் எந்த சூப்பர் ஹிட் படத்தையும் கொடுக்கவில்லை என்பதால், கோப்ராவை கொண்டாட அவரது ரசி்கர்கள் காத்திருக்கின்றனர்.

    உயர் நீதிமன்றத்தில் வழக்கு

    உயர் நீதிமன்றத்தில் வழக்கு

    கோப்ரா வெளியீட்டை முன்னிட்டு, விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் ரசிகர்களை நேரில் சந்தித்தனர். கோப்ரா படத்தின் இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில்,. கோப்ராவை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை

    தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை

    அந்த மனுவில், "கோப்ரா படத்தை அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 29 இணையதள சேவை நிறுவனங்கள் மூலம், சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இதுபோன்ற இணையதள சேவை நிறுவனங்கள் மூலம், 1,788 இணையதளங்களில் படம் வெளியிடப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

    உயர் நீதிமன்றம் உத்தரவு

    உயர் நீதிமன்றம் உத்தரவு

    மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணியன், கோப்ரா படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும், இதனால் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் வாதிட்டார். இதையடுத்து, விக்ரமின் கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Madras High Court has ordered the illegal release of Vikram's Cobra film on the internet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X