தலை கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் லியோ 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை.. 7 மணி ஷோ கிடைக்குமா?

சென்னை: லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளை ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் தயாரிப்பு நிறுவனம் முறையிட்ட நிலையில், தினமும் 5 சிறப்பு காட்சிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியில்லை என்றும் காலை 9 மணிக்குத் தான் முதல் காட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதிரடியாக அறிவித்து விட்டது.

Madras High Court orders No 4 am shows for Leo movie

4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை: இதனை ஏற்க மறுத்த லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை நேற்று ஒத்தி வைத்த நீதிபதி அனிதா சுமந்த் இன்று விசாரணை நடத்திய நிலையில், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காலை 7 மணி காட்சிக்கு அனுமதி பெற வேண்டுமானால், தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கி உள்ளார்.

துணிவு பிரச்சனை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகின. துணிவு படத்துக்கு நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் வண்டி மீது ஏறி நடனமாடி வந்த நிலையில், எதிர்பாராத விபத்து ஏற்பட்டு உயிரிழந்தது தான் அதிகாலை காட்சிகளுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மாவீரன், மாமன்னன், ஜெயிலர் உள்ளிட்ட பெரிய படங்களுக்கு மறுத்து வர காரணம்.

Madras High Court orders No 4 am shows for Leo movie

தமிழ்நாடு அரசு தயவு காட்டுமா?: நடிகர் விஜய்யின் லியோ படத்தை முதல் நாளே பார்த்தாக வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காலை 4 மணி காட்சி பல இடங்களில் திரையிடப்பட்டு வரும் நிலையில், அனைத்தும் ஹவுஸ்ஃபுல்லாகி உள்ளன. தமிழ்நாட்டிலும் அதிகளவில் டிக்கெட் டிமாண்ட் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு அரசிடம் மீண்டும் ஒருமுறை முறையிட லியோ படக்குழு தயாராகி வருகிறது. விரைவில் தமிழ்நாடு அரசின் உறுதியான முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X