ஆர்த்தி ரவி VS கெனிஷா முடியாத பஞ்சாயத்து.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையே
கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஆர்த்தி ரவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக இருக்கும் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கிடையேயான விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், ரவி மோகனுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும் பாடகி கெனிஷா சமூக வலைத்தளங்கள் மற்றும் சில பேட்டிகளில் ஆர்த்தி ரவியை குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என குற்றச்சாட்டு எழுந்தது.

ஆர்த்தி ரவி வழக்கு: இதையடுத்து, ஆர்த்தி ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட கெனிஷாவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஆர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாடகி கெனிஷா ஆர்த்தி ரவி பற்றி தெரிவிக்கும் கருத்துக்களால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகினார் என வாதிட்டார்.
நீதிபதி அதிரடி உத்தரவு: அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என் செந்தில்குமார், பாடகி கெனிஷா ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட அவதூறு பதிவுகள் மற்றும் கருத்துகளை உடனடியாக நீக்க உடனே வேண்டும் என்றும், ஆர்த்தி ரவி குறித்து பாடகி கெனிஷா எந்தவிதமான கருத்தையும் கூறக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார். அதே நேரம் ஆர்த்தி ரவி தொடர்ந்து வழக்கு குறித்து கெனிஷா பதில் அளிக்க வேண்டுமெனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications