Lingusamy - சிறைதண்டனையிலிருந்து தப்பித்தார் லிங்குசாமி - நிறுத்தி வைத்தது நீதிமன்றம்

சென்னை: Lingusamy (லிங்குசாமி) இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்டிருந்த ஆறு மாத சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

ஆனந்தம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லிங்குசாமி. முதல் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக எடுத்து அதில் வெற்றியும் பெற்றார். அதனையடுத்து அவர் இயக்கிய ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் பக்கா கமர்ஷியல் ஹிட்டாகின. குறிப்பாக ரன் படம் சாக்லேட் பாய் என்ற இமேஜிலிருந்து மாதவனை வெளியே கொண்டு வந்தது. அதேபோல் அவர் இயக்கிய சண்டக்கோழி படம் விஷாலின் கரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

Madras High Court suspended the six-month Imprisonment on director Lingusamy

அஞ்சானில் விழுந்த அடி: முன்னணி இயக்குநராக வலம் வந்த லிங்குசாமி சூர்யா, சமந்தா நடிப்பில் உருவான அஞ்சான் படத்தில் சறுக்கினார். படத்துக்கு முன்பாக அவர் கொடுத்த பேட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால் படம் சுமாராக இருந்ததால் லிங்குசாமியை வறுத்தெடுத்தனர் ரசிகர்கள். அப்போது விழுந்தவர் இன்றுவரை எழவில்லை. மேலும் உத்தமவில்லனும் படுதோல்வியை சந்தித்ததால் இக்கட்டான நிலைக்கு சென்றால் லிங்குசாமி.

எண்ணி ஏழு நாள்: இதற்கிடையே கார்த்தி, சமந்தா நடிப்பில் எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை இயக்குவதற்கு அவர் முடிவு செய்தார். அதற்காக பிவிபி கேப்பிடல்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் கடனாக பெற்றார் லிங்குசாமி. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை எண்ணி ஏழு நாள் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை.

லிங்குசாமிக்கு எதிராக வழக்கு: படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாததால் இந்தப் படத்திற்காக பெற்ற தொகையை திருப்பி செலுத்தக்கோரி பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் லிங்குசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்ப செலுத்த லிங்குசாமிக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.

Madras High Court suspended the six-month Imprisonment on director Lingusamy

பவுன்ஸ் ஆன செக்: இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக 35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பிவிபி நிறுவனத்துக்கு வழங்கினார் லிங்குசாமி. ஆனால் கணக்கில் போதுமான பணம் இல்லாததன் காரணமாக அந்த காசோலை பவுன்ஸ் ஆனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிவிபி நிறுவனம் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது.

சிறை தண்டனை: சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இயக்கநர் லிங்குசாமி தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமனறத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் லிங்குசாமி தரப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஆறு மாத சிறை தண்டனையை சில வாரங்களுக்கு முன்பு உறுதி செய்து உத்தரவிட்டது.

மேல்முறையீடு: இதனால் அதிர்ச்சியடைந்த லிங்குசாமி இந்தத் தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைகு வந்தது. அப்போது, பிவிபிக்கு கொடுக்கப்பட்ட காசோலையில் இருந்த தொகையில் 20 சதவீதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது. மேலும் 20 சதவீதம் தொகையை டெபாசிட் செய்ய தயார் எனவும் லிங்குசாமி தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து மீதம் 20 சதவீதம் தொகை ஆறு வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X