மதராசப்பட்டினம் படம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.. நடிகை எமி ஜாக்சன் ஓபன் டாக்!

சென்னை: மதராசப்பட்டினம் திரைப்படம் தனது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாக நடிகை எமி ஜாக்ஸன் தெரிவித்துள்ளர்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் மதராசப்பட்டினம். இந்தப் படம் 1900களில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்த சென்னையை அழகாக காட்சிப்படுத்தியிருக்கும்.

மேலும் ஆங்கிலேயே பெண் ஒருவர் தமிழ் இளைஞர் மீது காதல் கொள்வதாக அற்புதமான காதல் கதையையும் வெளிப்படுத்தியிருக்கும் மதராசப்பட்டினம் திரைப்படம்.

இந்திய சினிமாவுக்கு அறிமுகம்

இந்திய சினிமாவுக்கு அறிமுகம்

இந்தப் படத்தை இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கியிருந்தார். நடிகர் ஆர்யா லீடிங் ரோலில் நடித்திருந்தார். மேலும் நாசர், பாலா சிங், கொச்சின் ஹனிஃபா, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் லண்டன் மாடலான எமி ஜாக்சன், நடிகையாக இந்திய சினிமாவுக்கு அறிமுகமானார்.

இந்தியாவில் முதல் அனுபவம்

இந்தியாவில் முதல் அனுபவம்

இந்நிலையில் மதராசப்பட்டினம் வெளியாகி இன்றோடு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அப்படம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் நடிகை எமி ஜாக்ஸன். அதில், மதராசப்பட்டினம் திரைப்படம்தான் இந்தியாவில் தனது முதல் அனுபவம் என கூறியுள்ளார்.

மிகப் பெரிய இடம்

மிகப் பெரிய இடம்

தான் இதற்கு முன்பு ஐரோப்பாவை விட்டு வெளியே சென்றதே இல்லை என்றும் கூறியுள்ளார். இது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதன் பின்னர் பல விஷயங்கள் நடந்துள்ளது. ஆனால் மதராசபட்டினம் படம் என் இதயத்தில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது.

வாழ்க்கையை மாற்றிவிட்டது

வாழ்க்கையை மாற்றிவிட்டது

மதராசப்பட்டினம் திரைப்படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இயக்குநர் ஏஎல் விஜயை புகழ்ந்து பேசியுள்ள நடிகை எமி ஜாக்சன், கடவுளின் ஆசிர்வாதத்தால் தான், அவர்களை சந்தித்ததாகவும் கூறினார்.

ஆடிஷனுக்கு வரமுடியாது

ஆடிஷனுக்கு வரமுடியாது

மதராசப்பட்டினம் படத்தின் போது அனைவரும் ஒரு குடும்பம் போல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று கூறிய எமி ஜாக்ஸன், தனது ஏஜென்ட் ஆடிஷனுக்கு அழைத்த போது கூட நான் நடிகை இல்லை வர முடியாது என்றுதான் கூறினேன் என்றும் தனது அனுபவங்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X