twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பட ரிலீசிற்கு முன்பே மயக்குறாரே அதிதி...மதுர வீரனை பார்த்து மயங்கிய ரசிகர்கள்

    |

    சென்னை : டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசாக உள்ளது. கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் தந்தை - மகன் உறவை சொல்லும் முழு நீள கிராமத்து பொழுதுபோக்கு, காதல், சென்டிமென்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரகாஷ் ராஜ் முழு நேர வில்லனாக நடித்துள்ளார்.

    விருமன் படத்தின் டீசர், பாடல்களைத் தொடர்ந்து சமீபத்தில் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியிடப்பட்டது. ஆடியோ வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இதில் கார்த்தி, சூர்யா, பாரதிராஜா ஆகியோருடன் டைரக்டர் ஷங்கர் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

    விருமன் இசைவெளியிட்டு விழா..சூர்யா இப்படி செய்திருக்கக்கூடாது..வருத்தத்தில் சினேகன்!விருமன் இசைவெளியிட்டு விழா..சூர்யா இப்படி செய்திருக்கக்கூடாது..வருத்தத்தில் சினேகன்!

    விருமன் கதை இதுவா

    விருமன் கதை இதுவா

    விருமன் டிரைலரின் படி பார்த்தால், பிரகாஷ் ராஜிற்கு 4 மகன்கள். இதில் நான்காவது மகன் கார்த்தி. கார்த்திக்கும் பிரகாஷ் ராஜிற்கும் பிடிக்காது.இவர்கள் இருவரிடையே நடக்கும் மோதல்கள் தான் விருமன் படத்தின் கதை என தெரிகிறது. இதற்கிடையே சூரியின் காமெடி, அதிதியுடன் காதல் ஆகியனவும் உண்டு.பருத்திவீரன், கொம்பன் படங்களை மிக்ஸ் செய்தது போன்ற ஒரு லுக்கில் அசத்தி உள்ளார் கார்த்தி.

    யுவன் இசையில் 3 பாடல்கள்

    யுவன் இசையில் 3 பாடல்கள்

    யுவன்சங்கர் ராஜா இசையில் விருமன் படத்தில் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.இதில் கருமாத்தூர் மணிமாறன் வரிகளில் சித் ஸ்ரீராம் பாடிய "கஞ்சா பூ கண்ணாலே" பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டு பெறும் வரவேற்பை பெற்றது.மற்ற இரு பாடல்களையும் யுவன்சங்கர் ராஜாவே பாடி உள்ளார்.

    ரொமான்டிக்கான மதுர வீரன்

    ரொமான்டிக்கான மதுர வீரன்

    ராஜு முருகன் வரிகளில் யுவன்சங்கர் ராஜா மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடிய மதுர வீரன் பாடல் இன்று வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் யூட்யூப்பில் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.அனிமேஷன் டைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த லிரிக்கல் பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

    இந்த பாட்டை தான் பாடினாரா

    இந்த பாட்டை தான் பாடினாரா

    கார்த்தி - அதிதியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதுவும் இந்த பாடலை அவரே யுவனுடன் இணைந்து, ஆடியபடி பாடிய உள்ள காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதே பாடலை விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் மேடையில் யுவனுடன் இணைந்து ஆடியபடி பாடி அசத்தினார் அதிதி.

    தியேட்டரே கிடுகிடுங்க போகுது

    தியேட்டரே கிடுகிடுங்க போகுது

    விருமன் படத்தின் மூன்றாவது பாடலான வானம் கிடுகிடுங்க என்ற பாடலை கவிஞர் சினேகன் எழுதி உள்ளார். இந்த பாடலை யுவன்சங்கர் ராஜா முத்து சிற்பி உடன் இணைந்து பாடி உள்ளார். விரைவில் இந்த பாடலும் வெளியிடப்படலாம் என தெரிகிறது. விருமன் ரிலீசிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு மதுர வீரன் பாடல் செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    English summary
    Karthi starred Viruman movie will be released on August 12th. Behalf of movie release, today movie makers released, Madura veeran song as Viruman second single. This song was sung by Yuvan shakar raja and Aditi Shankar.This song reeceives good response from fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X