twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் படங்களை பார்க்காமல் புறக்கணியுங்கள்...மதுரை ஆதீனம் ஏன் அப்படி சொன்னார் தெரியுமா?

    |

    மதுரை : நடிகர் விஜய்யின் படங்களை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும் என மதுரை ஆதீனம் பேசி உள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. எதற்காக இப்படி சொல்லி உள்ளார் என்பதற்கு அவரே விளக்கமும் அளித்துள்ளார்.

    Madurai Aadheenam said that ignore actor Vijay movies for this reason

    மதுரை பழங்காநத்தம் பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம்,மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மதுரை ஆதீனம் பேசியது அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Recommended Video

    Madurai Aadheenam சரமாரி கேள்வி | Aadheenam ஏன் அரசியல் பேசக்கூடாது? | #Politics

    அவர் பேசுகையில், ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள். அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது. அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை. அரசியல்வாதிகள் கோவிலில் தர்க்காராக வந்து இருந்து கொள்கிறார்கள். கோவிலுக்குள் அரசியல் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள் ஏன் அரசியல் பேச கூடாது. திருக்கோவில் சொத்துக்கள் தொலைந்து போகிறது.

    அடுத்து அஜித், ரஜினி தான்.. விக்ரம் வெற்றி.. சந்தோஷத்தில் லோகேஷ் கனகராஜ் அம்மா, அப்பா!அடுத்து அஜித், ரஜினி தான்.. விக்ரம் வெற்றி.. சந்தோஷத்தில் லோகேஷ் கனகராஜ் அம்மா, அப்பா!

    திராவிட பாரம்பரியம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கிறார்கள். ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக் கொள்கிறார்கள். தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரம் திருக்கோவிலுக்குள் உள்ளது. திருவாசகத்தை அரசியல்வாதிகள் திருடிவிட்டார்கள்.

    இந்துக்களை அவமதிக்கும் வகையில், சினிமாக்களில் பேசிய நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள். கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என சொல்கிறார்கள். சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்கக் கூடாது என பேசி உள்ளார்.

    English summary
    During Hindu saints conference in Madurai, Madurai Aadheenam spoke that ignore actor Vijay's movies. Because he talking against Hinduism in his movies. Some people criticise him when he speak against those who disrespect hindu deities.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X