பிரபுதேவா படத்தில் மதுரைக்கார ஹீரோயின்! - ஷூட்டிங் தொடக்கம்

By Vignesh Selvaraj

சென்னை : பிரபுதேவா நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளிவந்த படம் 'சார்லி சாப்ளின்'. பிரபு, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஷக்தி சிதம்பரம் இந்தப் படத்தை இயக்கினார்.

இப்படம் முதன் முதலில் இந்தியாவில் ஆறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

Madurai actress in prabhu deva film

15 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் இப்போது ஆரம்பித்துள்ளார்கள். இந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் அடா ஷர்மா.

தமிழ்நாட்டில், மதுரையைச் சொந்த ஊராகக் கொண்ட ஷர்மாவின் மகளான அடா ஷர்மா சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். சன்ரைஸ் விளம்பரத்திலும் நடித்திருக்கிறார். அதற்குப் முன், இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்த அடாவுக்கு தமிழ் சினிமா அறிமுகம் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

இந்தப் படம் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கும் என எதிர்பார்க்கிறாராம் அடா ஷர்மா. படத்தில் இன்னொரு நாயகிகளாக நிக்கி கல்ரானி நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை முடிந்து படப்பிடிப்பு நேற்று கோவாவில் ஆரம்பமானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X