விஜய்க்கு ஓட்டு போடாதீங்க.. மதுரை அஜித்தின் கோட்டை.. விஜய்யே நின்னாலும் தோல்வி உறுதி.. அஜித் ரசிகர்கள் ஆவேசம்
சென்னை: நடிகர் அஜித்தின் மங்காத்தா படம் நேற்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆனது. படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளது. தமிழ் சினிமா ரீ ரிலீஸ் வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படமாக மங்காத்தா உருவெடுத்து நிற்கிறது. இப்படி இருக்கையில் மதுரையில் படம் பார்த்த ரசிகர்கள், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஜய்க்கு வாக்களிக்காதீர்கள், திமுக, அதிமுக வரட்டும், ஏன் நாம் தமிழர் கட்சியின் சீமான் கூட வரட்டும். எக்காரணம் கொண்டும் விஜய்க்கு வாக்கு அளிக்காதீர்கள். விஜய் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று காட்டமாக பேசி உள்ளார்கள். இவர்களின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக பரவி வரும் வீடியோவில், " ஒட்டுமொத்த தல ரசிகர்களும் 2026 இல் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டு போடுங்கள். ஆனால் புதுசா ஒருத்தன் வந்து ஏமாத்துறான். இத்தனை வருசமா நலத்திட்டம் பண்ணாமல், குழந்தைகளை எல்லாம் அழைத்து பரிசுகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறான்.
விஜய்யை நம்பி ஏமாற வேண்டாம்: அவனை நம்பி ஏமாற வேண்டாம். உங்களுக்கு பிடித்த யாருக்கு வேண்டுமானலும் ஓட்டு போட்டுக்கொள்ளுங்கள். ஆனால் 2026 இல் புதிதாக வந்தவனுக்கு ஓட்டு போட்டு நீங்கள் முட்டாள் ஆகிவிட வேண்டாம்" என்று ஒரு ரசிகர் கூறுகிறார். இதில் அவர் விஜய்யை தான் கூறுகிறார் என்று தெளிவாகத் தெரிகிறது என்று ரசிகர்கள் பலரும் பேசி வருகிறார்கள்.

நேரடி அட்டாக்: அதேபோல், மற்றொரு ரசிகர் பேசுகையில் விஜயை நேரடியாக விமர்சித்து பேசினார். அதாவது, "மதுரை தல அஜித்தின் கோட்டை. தேர்தலில் விஜயையே இங்கு நின்றாலும் ஒரு தொகுதி கூட அவர்களால் வெல்ல முடியாது. மதுரையில் நாங்கள் இருக்கும் வரை விஜய் படமும் ஓடாது கட்சியும் வெல்லாது. திமுக வரட்டும், அதிமுக வரட்டும், நாம் தமிழர் கட்சி வரட்டும் ஆனால் விஜயால் இங்கு வெல்லவே முடியாது" என்று பேசி உள்ளார்.

வீடியோ: அஜித் ரசிகர்களின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் கடுமையான எதிர்வினை ஆற்றிக் கொண்டு உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











