ஆர் ஆர் ஆர் படத்திற்கு எதிராக போஸ்டர்… அஜித் ரசிகர்களால் பரபரப்பான மதுரை!
மதுரை : ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு எதிராக அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எஸ்.எஸ். ராஜமௌலியின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஆர்ஆர்ஆர்.
இத்திரைப்படத்தில், ஜூனியர் என்டிஆர்,ராம்சரண், ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி என பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்.

ஆர் ஆர் ஆர்
ஆர் ஆர் ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. இப்படம் ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வலிமை
அதேபோல வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, குர்பானி நீதிபதி, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

பொங்கலுக்கு ரிலீஸ்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்திலிருந்து வெளியான விசில் தீம் மியூசிக் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "வலிமை" படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களை உற்சாகமடைய செய்து வருகிறது.

பரபரப்பாக்கி போஸ்டர்
இந்நிலையில், பொங்கலுக்கு வலிமை திரைப்படம் ரிலீஸாக உள்ளது. அதே போல ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜனவரி 7ந் தேதி வெளியாக உள்ளதால் அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பு அடைந்து ஆர்ஆர் ஆர் திரைப்படத்திற்கு எதிராக மதுரையில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டர் மதுரை சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications











