GBU: குட் பேட் அக்லி.. ஏப்ரல் 10.. தியேட்டர் துவம்சம் ஆக்கப்படும்.. அஜித் ரசிகர்கள் ஓபன் ஸ்டேட்மெண்ட்
மதுரை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், ரசிகர்களின் ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. படத்தின் டீசர் நேற்று அதாவது பிப்ரவரி 28ஆம் தேதி மாலை ரிலீஸ் ஆனது. டீசர் தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதில் மதுரையில் டீசரைப் பார்த்த ரசிகர் ஒருவர் பேசும்போது, திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்கிற்கு இன்ஸ்சுரன்ஸ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.
குட் பேட் அக்லி படம் அஜித் குமாரின் 63வது படம். இந்த படத்தை அஜித் குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கும் போது, டீசர் நேற்று ரிலீஸ் ஆனது. டீசரை தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தியேட்டர்களில் திரையிட்டனர். இதில் மதுரையிலும் பிரபலமான தியேட்டர்களில் டீசர் திரையிடப்பட்டது. இப்படியான நிலையில், டீசரைப் பார்த்துவிட்டு, வெளியே வந்த ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தனர். அதில் ஒரு ரசிகர் கூறும்போது, " நான் என்ன கொண்டு வந்து இருக்கிறேன் எனப் பாருங்கள். தங்க மோதிரம் கொண்டு வந்துள்ளேன். இந்த தங்க மோதிரம் யாருக்கு என்றால் படம் எடுத்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கொண்டு வந்துள்ளேன். இந்த மோதிரத்தை அடங்காத அஜித் குரூப்ஸ் சார்பாகவும் மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பாகவும் கொண்டு வந்துள்ளேன்.
மதுரை அஜித் ரசிகர்கள்: ஒட்டுமொத்த ரசிகர்களின் அன்பை வெளிக்காட்டும் பரிசுதான் இந்த மோதிரம். ஏன் என்றால், தியேட்டரில் அனல் பறக்கிறது. அஜித் சாரை ரசிகர்களாகிய நாங்கள் எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என ஆசை பட்டோமோ, எப்படி எல்லாம் அவரை புகழ வேண்டும் என ஆசை பட்டோமோ, எங்களின் எல்லா ஆசைகளையும் ஒரே ஒருவர் குட் பேட் அக்லி படத்தின் மூலம் கொடுத்துள்ளார்.
தங்க மோதிரம்: இப்படியான படத்தைக் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இந்த மோதிரம் நாங்கள் கொடுக்கும் அன்புப் பரிசு. மேலும் இந்த மோதிரம் டீசருக்காக நாங்கள் உருவாக்கிய மோதிரம். படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறும் போது, மதுரையில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு விழா குட் பேட் அக்லி படத்தின் 100வது நாளில் நடத்துவோம்.
எச்சரிக்கை: தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஒன்றைச் சொல்கிறோம், எச்சரிக்கையாக சொல்கிறோம். உங்கள் தியேட்டருக்கு இன்சூரன்ஸ் போடவில்லை என்றால் தயவு செய்து போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9. ஏப்ரல் 10ஆம் தேதி, எங்களின் கரகோஷத்தாலும், ஆரவாரத்தாலும் தியேட்டர் இரண்டாக பிளக்கப்படும். எனவே தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டர்களுக்கு இன்சூரன்ஸ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்" எனக் கூறினார். இவரது இந்த பேச்சு தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பகீர் கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











