GBU: டீசரில் தெறிக்கவிட்ட ஆதிக்.. 2 பவுன் மோதிரத்தோடு வந்து மாஸ் காட்டிய மதுரை தல ரசிகர்கள்!
மதுரை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், ரசிகர்கள் ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. படத்தின் டீசர் நேற்று அதாவது பிப்ரவரி 28ஆம் தேதி மாலை ரிலீஸ் ஆனது. டீசர் தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதில் மதுரையில் டீசரை பார்க்க வந்த அஜித் ரசிகர்கள், குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 2 பவுன் மோதிரம் வாங்கி கொண்டு வந்துள்ளார்கள்.
குட் பேட் அக்லி படம் அஜித் குமாரின் 63வது படம். இந்த படத்தை அஜித் குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வரும் ஏப்ரல் 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளதால், படத்தின் ப்ரமோஷனை படக்குழு தொடங்கிவிட்டது. முதலில் த்ரிஷாவின் பெயர் மற்றும் லுக்கை படக்குழு வெளியிட்டது. அதுவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை வானுக்கும் பூமிக்கும் குதிக்க வைக்கிறது. அஜித் மாஸ் கமர்ஷியல் படங்களில் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் நடித்துள்ள மாஸ் கமர்ஷியல் படமாக குட் பேட் அக்லி உருவாகியுள்ளது.
மதுரை ரசிகர்கள்: இப்படி இருக்கும்போது, டீசர் நேற்று ரிலீஸ் ஆனது. டீசரை தமிழ் நாடு முழுவதும் உள்ள பல தியேட்டர்களில் திரையிட்டனர். இதில் மதுரையிலும் சுமார் மூன்று தியேட்டர்களில் டீசர் திரையிடப்பட்டது. அப்படி இருக்கும்போது, டீசரைப் பார்த்துவிட்டு, வெளியே வந்த ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். அதில் ஒரு ரசிகர் கூறும்போது, " என்ன கொண்டு வந்து இருக்கிறேன் எனப் பாருங்கள். தங்க மோதிரம் கொண்டு வந்துள்ளேன். யாருக்கு என்றால் படம் எடுத்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கொண்டு வந்துள்ளோம். அடங்காத அஜித் குரூப்ஸ் சார்பகவும் மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பாகவும் கொண்டு வந்துள்ளோம்.
2 பவுன் மோதிரம்: ஒட்டுமொத்த ரசிகர்களின் அன்புப் பரிசு தான் இந்த மோதிரம். ஏன் என்றால், தியேட்டரில் தீ பிளம்பு வெளியே வருகிறது. அஜித்தை நாங்கள் எப்படி எல்லாம் பார்க்க வேண்டும், எப்படியெல்லாம் வர்ணிக்க வேண்டும், எப்படியெல்லம் நாங்கள் நினைத்தோமோ, அதனை ஒரே ஆள் கொடுத்துள்ளார். படம் எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் கைகளுக்கு இந்த மோதிரம்.
பாராட்டு விழா: இந்த மோதிரம் டீசருக்கு மட்டும் தான். படம் ஹிட்டானால், மதுரையில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு விழா 100வது நாளில் நடத்துவோம் எனக் கூறினார். இவரது இந்த பேட்டி அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல் மற்ற மாவட்டங்களில் உள்ள அஜித் ரசிகர்களும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அன்பு பரிசுகள் வழங்க திட்டமிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











