twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெட்ராஸ் கபே படத்திற்கு தடை விதிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு

    By Mayura Akilan
    |

    மதுரை: மெட்ராஸ் கபே படத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

    நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள மெட்ராஸ் கபே படத்தை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஸ்டாலின் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கூறியுயிருந்ததாவது :

    மெட்ராஸ் கபே' படத்துக்கு 2 தணிக்கை வாரியங்கள் சான்று அளித்துள்ளன. இதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சம்பவம், இலங்கையில் அமைதிப் படை நடவடிக்கை, அவர்களை தமிழர்கள் அவமதித்தார்கள் என்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழர்கள் தேச விரோதிகள், பயங்கர வாதிகள் என்பது போன்றும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    Madurai bench of HC refuses to grant interim stay on the release of Madras Cafe

    ஆகஸ்டு 5 ஆம் தேதி, சென்னையில் 'மெட்ராஸ் கபே' படத்தின் சிறப்புகாட்சி திரையிடப்பட்டது. இதில் படத்தின் கதாநாயகன் ஜான் ஆபிரகாம் பங்கேற்றார். அப்போது போலீஸ் தடியடி நடந்தது. இந்த படம் வருகிற 23 ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தை விமர்சனம் செய்துள்ள இந்த படத்தை பொது நன்மை கருதி தடை செய்ய வேண்டும். தணிக்கை வாரியம் அளித்த சான்றுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    நீதிபதிகள் பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் மனுவை நேற்று விசாரித்தனர். பின்னர் மத்திய, மாநில திரைப்பட தணிக்கை வாரியம், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். அது தொடர்பாக செப்டம்பர் 3ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டதோடு மத்திய திரைப்பட தணிக்கை குழுவிற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    இலங்கையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்போரை மையமாகக் கொண்டு 'மெட்ராஸ் கபே' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்து நடித்துள்ள இந்த படத்தை ஷீகித் சர்க்கார் இயக்கி உள்ளார். இதில் பிரபாகரனை தீவிரவாதி போன்று சித்தரித்து இருப்பதாகவும், எனவே 'மெட்ராஸ் கபே' படத்தை திரையிடக்கூடாது என்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Madurai bench of Madras High Court refuses to grant interim stay on the release of Madras Cafe, hearing on the PIL against the film's screening adjourned till September 3.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X