மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
சென்னை: மதுரையில் சித்திரை திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கொண்டாடப்பட்ட நிலையில் அதில் கலந்து கொண்ட சூரி தன்னுடைய instagram பக்கத்தில் தன்னுடைய சிறுவயது நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
தன்னுடைய அப்பாவோடு அவருடைய தோளில் அமர்ந்து கொண்டு தான் சித்திரை திருவிழாவில் அழகரை பார்க்க வந்த போது நடந்த அனுபவங்கள் குறித்து அந்த பதிவில் சூரி பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் சூரிக்கு அறிமுகமே தேவை இல்லை. ஆரம்ப காலகட்டத்தில் அடிமட்ட நிலையில் இருந்தாலும் தன்னுடைய உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாகவே அடுத்தடுத்து பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இன்று கதாநாயகனாக உயர்ந்து இருக்கிறார். அதிலும் ஆரம்பத்தில் சில சீரியல்களில் அடையாளம் தெரியாத அளவிற்கு நடித்த சூரி இன்று பிரபலமாகி இருந்தாலும் அவர் நடித்த திருமதி செல்வம் சீரியல் புகைப்படங்கள் வெளியாகி பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
பல நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து விட்டு பிறகு இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள். ஆனால் நடிகர் சூரி ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து தனக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைப்பதற்காக பல போராட்டங்களை போட்டு இருந்தாலும் இன்று விடுதலை திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி 2கே கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகர்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்.
சூரிக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இடம்பெற்ற புரோட்டா சீன் பெரிய அளவில் கை கொடுத்து இருந்தது. அதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனோடு முக்கிய கேரக்டரில் நடித்து வந்து சிவகார்த்திகேயன் இப்போது கதாநாயகனாக மாறி இருந்தாலும் பழசை மறக்கல பாஸ் நான் என்று சொல்கிற மாதிரி தான் தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் நடக்கும் நிகழ்வுகளில் மறக்காமல் கலந்து கொள்கிறார்.
அந்த வகையில் இன்று மதுரையில் சித்திரை திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மக்களோடு மக்களாக கலந்து கொண்ட சூரி அழகர் ஆற்றில் இறங்கும் போது அவர் மீது பூக்களை தூவி தன்னுடைய மகிழ்ச்சிகளை வெளிக்காட்டி இருக்கிறார். அதோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்த சூரி அதில், அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து முதன் முதலில் அழகரை பார்த்தேன்...
அப்போ அப்பா இவர்தான்டா அழகர் நல்லா பாரு... என்றார். அது மறக்க முடியாத நாள். அதுக்கப்புறம் இப்போதான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன். இது பேரானந்தம். நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்... என்று அதில் கூறியிருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











