மதுரையில் ரஜினிகாந்த் கோயில்.. 250 கிலோ கருங்கல்லில் சிலை.. பக்தி பரவசமடைந்த ரசிகர்!

சென்னை: ஆன்மிக அரசியலை ஆரம்பிக்கிறேன் என சொல்லி விட்டு கடைசியாக ஜெயிலர், தலைவர் 170 மற்றும் தலைவர் 171 என சினிமாவில் பிசியாகி விட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு மதுரையில் ஒரு ரசிகர் கோயில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Madurai fan built a temple for Superstar Rajinikanth

நடிகைகள் குஷ்பு, நயன்தாரா, சமந்தா, நிதி அகர்வாலுக்கு கோயில் கட்டி சிலை வைத்து ரசிகர்கள் தங்கள் அன்பை செலுத்தி வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மதுரையில் உள்ள பாசக்கார ரசிகர் ஒருவர் கோயில் கட்டியுள்ளார்.

சுமார் 250 கிலோ கருங்கல்லில் ரஜினிகாந்துக்கு சிலையும் வைத்து தினமும் வழிபாடு நடத்தி வருகிறாராம் அந்த ரசிகர்.

ரஜினிகாந்துக்கு கோயில்: மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் எனும் ரசிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்து வரும் வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த தலைவர் ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஹீரோ வழிபாடு: உலகளவில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தான் ஹீரோ வழிபாடு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட சாமிகள் மற்றும் கோயில்கள் உள்ள நிலையில், நடிகர்களுக்கும் ஆங்காங்கே ரசிகர்கள் தீவிர பக்தர்களாக மாறி கோயில்களை கட்டி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ரஜினி சிலைக்கு கீழ்: அந்த கோயிலில் ரஜினிகாந்தின் சிலைக்கு கீழ் தனது தாய் தந்தையர் புகைப்படத்தையும் விநாயகர் புகைப்படத்தையும் வைத்திருக்கிறார் கார்த்திக் மேலும், தினம் தோறும் ரஜினி சிலைக்கு பாலாபிஷேகம் எல்லாம் செய்து குடும்பத்துடன் வழிபாடு நடத்தி வருகிறாராம்.

Madurai fan built a temple for Superstar Rajinikanth

தீவிர பக்தர்: ரஜினிக்கு ரசிகர் என்பதையெல்லாம் தாண்டி தீவிர பக்தராகவே திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் மாறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் கட்ட வேண்டும் என்கிற தனது கனவை நனவாக்கி அவரை பூஜித்து தினமும் வழிபாடு செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறியுள்ளார்.

மும்பையில் ரஜினி: நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தலைவர் 170 படத்தில் நடித்து வரும் நிலையில், அமிதாப் பச்சன் உடன் மும்பையில் அந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு சம்மருக்கு தலைவர் 170 வரும் என தெரிகிறது. பொங்கலுக்கு லால் சலாம் வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X