சுதா கொங்கராவுக்கு இந்த ஊர்தான் ரொம்ப பிடிக்குமாம்.. எந்த ஊர் அது தெரியுமா?
சென்னை : இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என அடுத்தடுத்து மெகாஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார் சுதா கொங்கரா
தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற சூரரைப்போற்று படத்தை இப்போது இந்தியில் இயக்கி வருகிறார்.
அடுத்ததாக சிம்புவுடன் சுதா கொங்கரா இணைவதாக பேச்சுக்கள் அடி படும் நிலையில் தமிழ்நாட்டில் தனக்கு மிகவும் பிடித்த ஊர் ethu என சுதா கொங்கரா பகிர்ந்துள்ளார்.

இறுதிச்சுற்று சக்கைபோடு போட்டது
மணிரத்னம், பாலா என முன்னணி இயக்குனர்களிடம் பல ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் துரோகி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்களால் அந்த அளவிற்கு கவனிக்கப்படவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று சக்கைபோடு போட்டது.

நீண்ட தலைமுடியுடன்
தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியான இறுதிச்சுற்று மாபெரும் வெற்றி பெற்றது மேலும் இந்த படத்தில் நடிகர் மாதவனை மிக வித்தியாசமான ரோலில் காட்டியிருப்பார். நடிகர் மாதவன் அதுவரை சாக்லேட் பாய் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார் பின் சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் இறுதிச்சுற்று மூலம் என்ட்ரி கொடுத்தார் அதுவும் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் பாக்ஸிங் கோச்சாக நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுத்தது ரசிகர்களுக்கு சற்று சர்ப்ரைசாக இருந்தது

சூரரைப்போற்று இந்தியில் ரீமேக்
இறுதிச்சுற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது இந்தப் படம் தெலுங்கில் குரு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இறுதிச்சுற்று வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கினார் சுதா கொங்கரா உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. சூர்யா, அபர்ணா பாலமுரளி, விவேக் பிரசன்னா என பலரது நடிப்பில் வெளியான இந்தப் படம் ஓடிடியில் வெளியாகியிருந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தமிழில் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து சூரரைப்போற்று படத்தை இப்போது இந்தியில் இயக்கி வருகிறார்.

மிகவும் பிடித்த ஊர்
தமிழில் அடுத்ததாக மீண்டும் உண்மை சம்பவங்களை மையப்படுத்திய கதை ஒன்றை தயார் செய்து கொண்டிருக்கும் சுதா கொங்கரா தமிழ்நாட்டிலேயே தனக்கு மிகவும் பிடித்த ஊர் மதுரை தான் என கூறியுள்ளார். மேலும் மதுரையில் ஜிகர்தண்டா, மீனாட்சி அம்மன் கோயில் குறிப்பாக மதுரைக்காரங்க பேசும் மொழி எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதிலும் ஆடுகளம் படத்தில் தனுஷ் மதுரை ஸ்லாங்கில் கொன்டேபுடுவேன் என சொல்லுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலிருந்து மதுரை தமிழுக்கு நான் அடிமையாகிவிட்டேன். இவ்வாறு மதுரைக்கும் தனக்கும் உள்ள கனெக்டிவிட்டி குறித்த சுதா கொங்கரா பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











