twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசைஞானி இளையராஜா இசையில் "மதுரை மணிக்குறவன்"

    |

    சென்னை: ஹரிக்குமாரின் இரட்டை வேடத்தில், ராஜரிஷி இயக்கியுள்ள படம் "மதுரை மணிக்குறவன்".

    இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். முத்துலிங்கம் பாடல்களை எழுதியுள்ளார்.

    ஒளிப்பதிவாளராக டி.சங்கர், படத்தொகுப்பு பணிகளை வி.டி.விஜயன் செய்துள்ளார். ஜாக்குவார் தங்கம், விஜய் ஜாக்குவார் ஆகியோர் ஸ்டண்ட் பணிகளை செய்துள்ளனர்.

    இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்!இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்!

    படத்தின் கதைக்களம்

    படத்தின் கதைக்களம்

    ஹரிக்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அண்ணன் தம்பி இருவரின் பகைமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இறந்து விடுகின்றனர். நிறை மாத கர்ப்பிணியான அண்ணனின் மனைவி அதிர்ச்சியில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுவிட்டு இறந்து விடுகிறாள். அநாதையாக்கப்பட்ட இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை அந்த வீட்டு பணிப்பெண் வளர்க்கிறாள். மற்றொரு குழந்தையை ஒரு போலீஸ்காரர் வளர்க்கிறார்.

    கிடப்பில் போடப்பட்ட வழக்கு

    கிடப்பில் போடப்பட்ட வழக்கு

    20 ஆண்டுகளுக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட கொலைக்குற்றங்களை கண்டுபிடிக்க சிறப்பு காவல்துறை அதிகாரி அந்த ஊருக்கு வருகிறார். விசாரணையில் இறந்து போனவர்கள் தன் அப்பாவும், சித்தப்பாவும் என்று தெரியவர மனமுடைகிறார். அதே நேரம் தன் கூடப்பிறந்தவர் மதுரையில் இருக்கிறார் என தெரிந்தபின் பெரு மகிழ்ச்சி அடைகிறார். இந்த கொலைக் குற்றங்களை செய்தது யார்? தன் உடன்பிறந்த சகோதரனை சந்தித்தாரா? என்பதை திடீர் திருப்பங்களுடன் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் சொல்லும் கதை இது.

    படத்தின் வில்லன்

    படத்தின் வில்லன்

    காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் G.காளையப்பன் தயாரித்து ஆர்ப்பரிக்கும் அட்டகாசமான வில்லனாக நடித்துள்ளார். ராஜரிஷி இயக்கியிருக்கிறார். தூத்துக்குடி, மதுரை சம்பவம் போன்ற படங்களின் மூலம் பிரபலமான ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்க, மாதவிலதா கதாநாயகியாகி உள்ளார்.

    பருத்திவீரன் சரவணன்

    பருத்திவீரன் சரவணன்

    வில்லன்களாக G.காளையப்பன், சுமன், பருத்திவீரன் சரவணன், குணச்சித்திரங்களாக ராதாரவி, கெளசல்யா, ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஓ.ஏ.கே சுந்தர், அனுமோகன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் உள்ளனர்.

    8 சண்டை காட்சிகள்

    8 சண்டை காட்சிகள்

    இதன் படப்பிடிப்பு மதுரை, தேனி, குரங்கினி, சுருளி, பாகனேரி, புல்வநாயகி அம்மன் கோயில் போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இப்படத்தில் 6 பாடல்களும் 8 சண்டை காட்சிகளும் உள்ளது. பின்னணி இசை நடைபெற்று வருகிறது.

    English summary
    Madurai Manikuravan movie music by Ilayaraja
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X