2வது மனைவியுடன் திருமண நாள்.. மதுரை முத்து இதுக்கும் ஒரு ஜோக் சொல்லுங்க என வெறுப்பேற்றும் ஃபேன்ஸ்!
சென்னை: மதுரை முத்துவின் முதல் மனைவி லேகா கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது தோழியான நீத்து என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மதுரை முத்து இன்று தனது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில், குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
எப்போதுமே மொக்கை ஜோக் சொல்லி தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை தக்க வைத்திருக்கும் மதுரை முத்துவின் இந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் இதுக்கும் ஒரு ஜோக் சொல்லுங்க என்று வெறுப்பேற்றி வருகின்றனர்.

கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலந்துக் கொண்டு ஜோக்குகளை சொல்லி ரசிகர்களை மகிழ்வித்த மதுரை முத்து விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கார் விபத்தில் முதல் மனைவி மரணம்: சினிமாவிலும் சில படங்களில் காமெடியனாக கலக்கி வரும் மதுரை முத்துவின் மனைவி லேகா கடந்த 2016ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். லேகா மதுரையில் இருந்து பிள்ளையார்பட்டி செல்வதற்காக டிரைவர் கண்ணனுடன் சென்றபோது, திருப்பத்தூர் கோட்டையிருப்பு பகுதி அருகே காரின் டயர் வெடித்து, கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளியமரத்தில் மோதியதில் லேகா உயிரிழந்தார், டிரைவர் கண்ணன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்தப்பினார்.
முதல் கணவரை இழந்து வாடி வந்த நிலையில், லேகாவை திருமணம் செய்துக் கொள்ள பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி மதுரை முத்து காதலித்து அவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவரது பிரிவு மதுரை முத்துவை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.
பல் மருத்துவருடன் இரண்டாவது திருமணம்: லேகாவின் தோழியும் பல் மருத்துவரான நீத்துவை சில மாதங்களிலேயே மதுரை முத்து திருமணம் செய்துக் கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், தனது இரு மகள்கள் மற்றும் வயதான பெற்றோருக்காகத் தான் நீத்துவை திருமணம் செய்துக் கொண்டதாக மதுரை முத்து மனம் திறந்து பேசியது ரசிகர்களை நெகிழ வைத்தது.

திருமண நாள் கொண்டாட்டம்: இந்நிலையில், இன்று தனது இரண்டாவது மனைவி நீத்துவுடன் திருமண நாளை மதுரை முத்து கொண்டாடி வரும் நிலையில், குடும்ப புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த மதுரை முத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுக்கும் ஒரு ஜோக் சொல்லுங்க: தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொக்கை ஜோக்குகளாக சொல்லி ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் மதுரை முத்து Wedding Day என போஸ்ட் போட்ட நிலையில், ஒரு ரசிகர் அதற்கு கீழே வந்து இன்னைக்கு Friday என போட்டு காண்டேத்தியுள்ளார். மேலும், சில தீவிர ரசிகர்கள் இதுக்கும் ஒரு ஜோக் போட்டு விடுங்க மதுரை முத்து என வெறுப்பேற்றி வருகின்றனர். மேலும், மகள்கள் எங்கே காணோம் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











