பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான்.. அதுக்காக இப்படியா.. மதுரை முத்துவின் வயித்தெரிச்சல் மீம்ஸ்!

சென்னை: நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காமெடி மீம்களை பதிவிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.

கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு என கலக்கிய மதுரை முத்து விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார்.

சமீப காலமாக சில படங்களிலும் நடித்து வரும் மதுரை முத்து தனது வித்தியாச கெட்டப் போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

Madurai Muthu Pallu irukuravan Pokkoda Thinguran meme trending

பிச்சைக்கார வேடத்தில்: ஸ்டாண்ட் அப் காமெடியனான மதுரை முத்துவின் நகைச்சுவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் சொல்லும் மொக்கை ஜோக்குகள் அதன் டைமிங் மற்றும் அவரது மாடுலேஷன் காரணமாக ஏராளமான ரசிகர்களை அவரது ரசிகர்களாக மாற்றி வருகிறது.

இந்நிலையில், பிச்சைக்கார கெட்டப்பில் ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் மதுரை முத்து தனது படப்பிடிப்பு தள போட்டோ ஒன்றை ஷேர் செய்து யார் என்று தெரிகிறதா? என கேட்டுள்ளார். நல்லா தானே இருந்தீங்க மதுரை முத்து உங்களுக்கா இந்த நிலைமை என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்தும் வருகின்றனர்.

Madurai Muthu Pallu irukuravan Pokkoda Thinguran meme trending

சேர் படாம: மீ: என்னடி வீட்டுக்குப் போயிட்டியா? ஷீ: சேர் ஆட்டோல போயிட்டு இருக்கேன் டா: மீ: ட்ரெஸ்ல சேர் படாம பார்த்து உக்காந்து போ" என படு மொக்கையான காமெடிகளையும் மீமாக போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் மதுரை முத்து.

Madurai Muthu Pallu irukuravan Pokkoda Thinguran meme trending

பல்லு இருக்குறவன்: இப்படி அடிக்கடி கடி ஜோக்குகளாக போட்டு ரசிகர்களின் உயிரை வாங்கி வரும் மதுரை முத்து தற்போது வெளியிட்டுள்ள ஒரு ஜோக் மீம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது.

பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான்.. அதுக்காக இப்படியா என பெரிய பற்களுடன் ஒரு நபர் கேர்ள் ஃபிரெண்ட் உடன் ரொமான்ஸ் பண்ணும் போட்டோவை போட்டு வயித்தெரிச்சல் மீம்ஸை போட்டு டிரெண்டாக்கி உள்ளார் மதுரை முத்து.

அசத்தப்போவது யாரு வீடியோ: அடிக்கடி தான் பேசிய பழைய அசத்தப் போவது யாரு காமெடி வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் மதுரை முத்து.

லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள அசத்தப்போவது யாரு காமெடி வீடியோவை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த மதுரை முத்து இப்படி ஆகிட்டாரே என கேலி செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X